For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் 10 அழகு பொருட்கள்!!!

By Super
|

மேக்-அப் இல்லாமல் ஒரு பெண்ணை கண்டால் அவளை நமக்கு அடையாளம் தெரிவதில்லை என்று கிண்டல் செய்வது வழக்கம். அந்த அளவுக்கு அழகு பொருட்களுக்கு முக்கியத்துவம் நம்முள் உள்ளது. அது பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் பொருந்தும். இன்று உள்ள போட்டி மிக்க உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட அழகு பொருட்கள் சந்தையில் கிடைக்கிறது. நாமும் எதையும் சிந்திக்காமல் அதை வாங்கிப் பயன்படுத்துகிறோம். அதனால் உண்டாகும் சாதகம் மற்றும் பாதகங்களை அறிய வேண்டாமா?

சந்தையிலும், அழகு நிலையங்களிலும் பல வகையான அழகு சாதனப் பொருட்களும், சரும பாதுகாப்பு பொருட்களும் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்தி பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும், நோய் நொடியற்ற உடல் மற்றும் வழுவழுப்பான அழகான சருமத்தையும் பெறலாம். இருப்பினும், இவற்றில் சில பொருட்கள் பாதுகாப்பானதாக இருப்பதில்லை. பெண்கள் தங்களை அழகாக காட்டவே அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் பல அழகு சாதனப் பொருட்களில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பதால், சருமத்தை அதிக அளவில் அது பாதிக்கும். பல அழகு சாதனப் பொருட்கள் சருமத்தை மிகவும் பாதிக்கும் வகையாகவே இருக்கிறது. இவைகளில் புற்றுநோயை உண்டாகும் கார்சினோஜினிக் உள்ளது என்று பல ஆய்வுகள் சொல்கிறது. மேலும் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தினால், சருமத்துளைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதனால் பாக்டீரியா உண்டாகி சருமம் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே உடம்பையும், சருமத்தையும் பாதிப்படைய வைக்கும் பத்து அழகு சாதனப் பொருட்களை பற்றி இப்போது பார்க்கலாம். ஆனால் ஆபத்து இந்த பத்து பொருட்களோடு நின்று விடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக், உதட்டில் உள்ள ஈரப்பசையை காயச் செய்யும். லிப்ஸ்டிக்குடன் ஒப்பிடுகையில், உதட்டுக்கு தடவும் ஈரப்பசை மருந்தில் ஆபத்து குறைவே. சில லிப்ஸ்டிக் மற்றும் லிப் க்ளாஸ்களில் கலந்துள்ள எண்ணெய் மற்றும் ரசாயனங்கள், உதட்டை அழகாக காட்டுவதற்கு பதில் அதை சேதப்படுத்திவிடும். லெட் (lead) சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு சிகப்பு நிற லிப் ஸ்டிக்கில் கலந்திருக்கும். இந்த லெட் நம்முள் செல்வதால் மூளைச் சிதைவு ஏற்படும்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

சரும பாதுகாப்பு நிறுவனங்கள் விற்கும் எல்லா வகையான புகழ் பெற்ற மாய்ஸ்சுரைசர்களிலும் அதிக அளவிலான சலவை பொருட்களும், சலவை பொருட்களைச் சார்ந்த ரசாயனங்களும் கலந்துள்ளதால், அது சருமத்தை பாதித்து, சருமத்தின் இயற்கை பாதுகாப்பு அமைப்பின் வீரியத்தை குறைக்கும்.

காஜல்

காஜல்

காஜல் பயன்படுத்துவது, கண்களுக்கு எதிராக பல விளைவுகளை தரும். உதாரணத்திற்கு ரசாயன வளர்ச்சி, நச்சுத்தன்மையால் உண்டாகும் இமைப்படல அழற்சி, கண்விழி விறைப்பு நோய், ஈரப்பதமற்ற விழிகள் மற்றும் இமைப்படலத்தில் நிறச் சிதைவு ஏற்படுதல் போன்றவைகள். எனவே கண்களுக்கு உள்ளே செல்லும் அழகு சாதனங்களான காஜல், சுர்மா அல்லது வேறு எந்த பொருளாக இருந்தாலும், அதை தவிர்ப்பது நல்லது.

நெயில் பாலிஷ்

நெயில் பாலிஷ்

அடர்த்தியான நிறத்தை கொண்ட நெயில் பாலிஷ்களை பயன்படுத்துவதால், நகம் பழுப்பு நிறத்தில் மாறும். மேலும் நெயில் பாலிஷ்களில் அசிட்டோன் என்ற கடுமையான ரசாயனம் இருந்தால், அது நகத்தின் பலத்தை குறைத்து வலுவற்றதாக்கும்.

டால்கம் (நறுமண) பவுடர்

டால்கம் (நறுமண) பவுடர்

டால்கம் பவுடரில் சிலிகேட் டால்க் போன்ற ரசாயனங்கள் இருப்பதால், அவை புற்று நோயை உண்டாகும் கார்சினோஜென் மட்டுமல்லாது, நுரையீரலில் தொற்றும் ஏற்படும். டால்க் ஈரப்பதத்தை உறிஞ்சுவதால், வியர்வையை தடுக்க அதை பயன்படுத்துவோம். ஆனால் இது சருமத்தை பாதிப்புக்குள்ளாக்கும்.

ப்ளீச் கிரீம்கள்

ப்ளீச் கிரீம்கள்

வீரியமிக்க ரசாயன ப்ளீச், சருமத்தை வழுவழுப்பாக வைத்துக் கொள்ளவும், சுருக்கங்களை தவிர்க்கவும் உதவியாக இருக்கும் எண்ணெய் பசையை அழிக்கும்.

வேக்சிங் (waxing)

வேக்சிங் (waxing)

தேகத்தின் மீது உள்ள முடியை அகற்ற வேக்சிங் செய்வதால் சில தீமைகள் உள்ளன. சிலருக்கு முடி வளர்ச்சி அரைகுறையாக இருக்கும், சிவப்பு தடுப்புகள் மற்றும் சிறிய அளவு இரத்தக் கசிவுகளும் கூட ஏற்படும். முகத்தில் வேக்சிங் செய்வதால், முக சருமம் விரைவிலேயே தளர்ச்சி அடைந்து, சருமம் கடுமையாகவும் மாறும். முக சருமமானது மிகவும் மென்மையானவை. அதனால் முகத்தில் வேக்சிங் செய்தால், சீக்கிரத்திலேயே சருமத்தை பாதித்துவிடும்.

ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை

ஹேர் கலரிங் மற்றும் ஹேர் டை

தலை முடிக்கு கலரிங் செய்யும் முன், அதனை உபயோகிப்பதால் ஏற்படும் அலர்ஜிகள் பற்றி அறிய வேண்டும். முடி கழிதல், எரிச்சல், தேகம் சிவத்தல், தலை அரித்தல், முக வீக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிக்கல் போன்றவைகள் தான் அவற்றில் சில. இந்த வகையான சாயங்களில் பல ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் அது நம் உடம்புக்கு தீங்கு விளைவிக்கும்.

டியோடரண்ட்

டியோடரண்ட்

அறிவியல் ஆய்வுகளின் படி, டியோடரண்ட்களில் சருமத்திற்கும், உடம்புக்கும் ஆபத்தை விளைவிக்கும் பொருட்கள் பல உள்ளன. அதிலும் அதனுள் ஆல்கஹால் இருப்பதால், அதை உபயோகிக்கும் போது நமக்கு எரிச்சலை உண்டாக்குவதோடு, அரிப்பை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் சருமத்தின் நிறம் மாறும்.

நறுமணம்

நறுமணம்

ஏற்கனவே சொன்னது போல் அழகுப் பொருட்களில் பல ஆபத்தான ரசாயனம் கலந்திருக்கிறது. துணிகளை மென்மையாக வைக்க உதவும் பொடிகளில், சலவை செய்ய பயன்படுத்தும் பொடிகளில், வாசனை திரவங்களில், காற்று நறுமண திரவங்களில் மற்றும் இது போல் உள்ள சில பொருட்களில் நறுமணத்தை உண்டாகும் ரசாயனங்கள் உள்ளதால், அது உடல் நலத்தையும் சுற்றுப்புற சூழலையும் பாதித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 cosmetics that can harm your skin | சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் 10 அழகு பொருட்கள்!!!

We give you a list of 10 cosmetic and makeup products that can cause significant harm to your skin and body - the list is by no means complete; it is just the tip of the iceberg!
Desktop Bottom Promotion