குளிர்காலத்திற்கான நைட் க்ரீம்களை வீட்டிலேயே செய்யலாம்!!!

Posted by:
Published: Wednesday, December 19, 2012, 13:42 [IST]
 

ஒவ்வொரு பெண்ணும் தன் சருமம் நன்கு பொலிவோடு, மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அதிலும் குளிர்காலத்தில் தான் இந்த விருப்பத்திற்கு எதிர்மாறாக சருமம் வறட்சியடைவது, வெடிப்பு ஏற்படுவது என்றெல்லாம் ஏற்படும். எனவே அத்தகைய பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படாமல் இருப்பதற்கு நைட் க்ரீம் பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இந்த நைட் க்ரீமானது இரவில் படுக்கும் முன் தடவி தூங்குவதால், க்ரீமில் உள்ள சத்துக்கள் அனைத்தும் சருமத்தில் நுழைந்து, சருமத்தை வறட்சியின்றி பொலிவாக்குகின்றன.

இதற்காக பல நைட் க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்து சருமத்தை எந்த ஒரு பக்கவிளைவுமின்றி அழகாக்கும் என்று சொல்லமுடியாது. ஏனெனில் அதில் கெமிக்கல்கள் இருப்பதால், அவை நிச்சயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே அத்தகைய பிரச்சனைகள் சருமத்தில் வராமலிருப்பதற்கு, இயற்கை முறையே சிறந்தது. அதென்ன இயற்கை முறை என்று கேட்கிறீர்களா? அதுதான் அந்த நைட் க்ரீம்களை வீட்டிலேயே தயாரித்து, தடவினால், சருமத்திற்கு எந்த பிரச்சனை ஏற்படாமலும் பொலிவாக்கலாம். இந்த நைட் க்ரீமை வீட்டில் செய்வதற்கு சில பொருட்கள் பொதுவாக இருக்கும். அவை ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, ரோஸ் வாட்டர், வினிகர் என்பன. இப்போது கடைகளில் எப்படி நைட் க்ரீமில் பல ப்ளேவர்கள் உள்ளவோ, அதேப் போல் வீட்டிலும் ஃப்ளேவர் கொண்டு தயாரிக்கலாம். இப்போது அந்த நைட் க்ரீம்களில் சிலவற்றை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

பாதாம் எண்ணெய் மற்றும் லெனோலின் க்ரீம்

இரவு நேரத்தில் சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்கு இந்த வகையான நைட் க்ரீம் சிறந்ததாக இருக்கும். இந்த க்ரீம் செய்வதற்கு பாதாம் எண்ணெய் முக்கியமானது. ஏனெனில் அவற்றில் வைட்டமின் ஈ அதிகமாக நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் சிறந்தது. சொல்லப்போனால் சருமத்திற்கு அழகைக் கொடுக்கும் சத்து என்றால் அது வைட்டமின் ஈ தான். எனவே 3 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் லெனோலின் சேர்த்து கலந்து, அவற்றை சூடேற்றி, பின் குளிர வைக்க வேண்டும். கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதில் சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து, 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் தடவி வந்தால், சருமத்தில் ஏற்படும் வறட்சி நீங்கி, சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

ஆப்பிள் நைட் க்ரீம்

ஆப்பிள் சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவும். அத்தகைய ஆப்பிளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் க்ரீமானது, சென்சிடிவ் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இதற்கு ஆப்பிளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதில் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு கலந்து, இரவில் படுக்கும் போது சருமத்திற்கு தடவி படுக்க வேண்டும். இதனால் சருமம் நன்கு பொலிவோடு அழகாக இருக்கும்.

ஆலிவ் ஆயில் நைட் க்ரீம்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு, இந்த வகையான நைட் க்ரீம் ஏற்றதாக இருக்கும். இந்த க்ரீம் செய்வதற்கு 3 டீஸ்பூன் மெழுகுடன், 1/2 கப் ஆலிவ் ஆயிலை கலந்து, நன்கு சூடேற்றி, பின் அவற்றை அறை வெப்பத்தில் குளிர வைத்து, 1/2 டீஸ்பூன் வினிகர் மற்றும் 1/2 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு க்ரீம் போன்று வரும் வரை கிளற வேண்டும். பின்னர் இதனை தடவினால், இதில் உள்ள வினிகர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கி, தேவையான எண்ணெய் பசையை மட்டும் வைத்து, சருமத்தை அழகாகவும், பொலிவோடும் வைத்திருக்கும். முக்கியமாக, இதில் வினிகர் சேர்த்திருப்பதால், இந்த க்ரீமை சருமத்திற்கு தடவுவதற்கு முன், ஒரு சிறு பகுதியில் தடவிப் பார்த்து, பின் அலர்ஜி ஏற்படாமல் இருந்தால் பயன்படுத்த வேண்டும்.

பால் க்ரீம்

பால் க்ரீம் சருமத்தை அழகாகவும், வெள்ளையாகவும் வைத்திருக்க உதவும். இந்த க்ரீம் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு சிறந்தது. இந்த க்ரீம் செய்ய, 3 டீஸ்பூன் மில்க் க்ரீமுடன் சிறிது ரோஸ் வாட்டர், கிளிசரின் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொண்டு, பின் எப்போதெல்லாம் சருமம் வறட்சியுடன் இருக்கிறதோ, அப்போது தடவி வந்தால், சருமம் நன்கு பொலிவோடு, ஈரப்பசையுடன் இருக்கும்.

கற்றாழை நைட் க்ரீம்

பருக்கள் மற்றும் வெடிப்புகள் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல ஆப்சன் என்றால் அது கற்றாழை தான். அதற்கு சிறிது கற்றாழை ஜெல்லுடன் 2 டீஸ்பூன் மாலை ப்ரிம்ரோஸ் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து க்ரீம் போல் கலந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள கற்றாழையானது பருக்களை மட்டும் நீக்குவதில்லை, சருமத்தை நன்கு சுத்தமாக மென்மையாக்குகிறது.

English summary

Homemade Night Creams For Winter | குளிர்காலத்திற்கான நைட் க்ரீம்களை வீட்டிலேயே செய்யலாம்!!!

Homemade night creams works on your skin naturally and is a safe option. Below are few homemade night creams that can be easily made at home.
Write Comments

Subscribe Newsletter
Boldsky இ-ஸ்டோர்