For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்யும் வெங்காயத்தின் அற்புத பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள் தோழிகளே!

By Hemalatha
|

தலையில் சராசரியாக 30 லிருந்து 60 முடிகள் உதிர்வது நார்மல்தான் எனக் கூறுகின்றனர் கூந்தல் பராமரிப்பு வல்லுநர்கள்.

ஆனால் கொத்து கொத்தாய் முடி கொட்டும் போதுதான் பக்கென்று இருக்கும். திருமணம் முன் அவ்வளவு அடர்த்தியாய் இருந்துச்சு. குழந்தை பிறந்ததும் முடியெல்லாம் காணாமல் போய் எலி வாலாய் ஆகி விட்டதே என கவலைப் படுகிறீர்களா? இது நிச்சயம் உங்களின் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்.

Amazing benefits of onion juice for faster hair growth

பக்கவிளைவுகளில்லாதது :

வெங்காயம் தலை முடி உதிர்வதை தடுத்து, முழுவதும் வளர ஊட்டமளிக்கிறது. பக்க விளைவுகளில்லாதது. அலர்ஜியையையும் தராது.

வெங்காய சாற்றினை தலைக்கு உபயோகப்படுத்துவதாலும், நாள்தோறும் வெங்காயத்தை சாப்பிடுவதாலும், முடி உதிர்வதை தடுக்கலாம் என ஆய்வு கூறுகின்றது.

மேலும் கூந்தல் வேர்க்கால்களுக்கு உறுதி அளித்து முடியை அடர்த்தியாக வளரச் செய்வது நிச்சயம்.

தலையில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் :

வெங்காயத்தில் உள்ள சல்ஃபர் ரத்த ஓட்டத்தை தலையில் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் வேர்கால்களில் புதிய முடிகள் வளரத் தொடங்குகின்றன. அதோடு, முடி பிளவையும் தடுக்கின்றது. கூந்தலுக்கு பலம் தருகிறது.

பொடுகினை கட்டுபடுத்துகிறது :

தலையில் ஏற்படும் பொடுகினை வராமல் தடுக்கிறது. சல்ஃபர் நாம் மறந்துவிட்ட சத்துக்களில் ஒன்று. இது நோய் எதிர்ப்பு செல்களுக்கு ஊட்டம் அளிக்கிறது.

மேலும் தலையில் ஏற்படக்கூடிய பொடுகு, பூஞ்சைத் தொற்று, ஈஸ்ட் தொற்று ஆகியவற்றை காணாமல் போகச் செய்யும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு.

இப்போது எந்த வகைகளில் வெங்காயத்தை கூந்தல் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் எனப் பார்க்கலாம் :

வெங்காயச் சாறு+தேங்காய் எண்ணெய்

ஒரு கப் வெங்காயச்சாறுடன் அரை கப் தேங்காய் எண்ணெய் கலந்து அதனை ஸ்கால்பில் படுமாறு தேயுங்கள். பின் மெதுவாக மசாஜ் செய்து, ஒரு டவலால் தலையை தளர்வாய் கட்டிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து பின் வெதுவெதுப்பான நீரில் அலாசவும். இது கூந்தல் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. அடர்த்தியாய் முடி வளரும்.

வெங்காயச் சாறு+ பியர்

இந்த கலவை நீங்களே ஆச்சரியப்படும் வகையில் கூந்தல் வளர, பலனைத் தரும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெங்காய்சச் சாறுடன் சிறிது பியரை கலந்து ஸ்கால்பில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின், வெதுவெதுப்பான டவலால் மாஸ்க் போல முழுவதும் மூடி கட்டிவிடுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலாசலாம். இது கூந்தலிற்கு மினுமினுப்பை கொடுத்து, போஷாக்கு அளிக்கும்.

வெங்காய பேஸ்ட் +தேன்:

வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் போலச் செய்து கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கலங்க்கிக் கொள்ளுங்கள். இந்த கலவையினை தலையில் தேய்த்து, இதமாக மசாஜ் செய்யவும்.

பின் மேல் கூறியது போலவே, தலையை வெதுவெதுப்பான டவலால் கட்டிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலையை அலாசவும். கூந்தலில் கடினத்தன்மை போய், மிருதுவாக மாறும். கூந்தல் மினுமினுப்பைப் பெறும்.

வெங்காயம்+ ரம்

ரம் பியர் எல்லாம் குடிக்க மட்டும்தானே எல்லாரும் உபயோகப்படுத்துவார்கள். ஆனால் அவை கூந்தல் வளர அற்புதமாக துணை புரியும். வெட்டிய வெங்காயத்தை ஒரு கிளாஸ் ரம்மில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். குறைந்தது 12 மணி நேரம் ஊற வேண்டும். அடுத்த நாள் வெங்காயத்தை வடிகட்டி எடுத்து விடவும். ஊறிய ரம்மினை தலையில் தேய்த்து மசாஜ் செய்து, அலாசவும்.

மேற்கூறிய வழிகள் அனைத்தும், ரொம்ப நாட்களாய் கூந்தல் உதிர்ந்து, முடி வளர்ச்சியே இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. முயன்று பாருங்கள் நண்பர்களே.

English summary

Amazing benefits of onion juice for faster hair growth

Amazing benefits of onion juice for faster hair growth
Desktop Bottom Promotion