For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் ஜூஸ்கள்!!!

By Maha
|

இன்று பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று கூந்தல் உதிர்தல். இந்த பிரச்சனையால் பலர் இளம் வயதிலேயே வழுக்கைத் தலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆகவே பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையைத் தடுக்க, டிவிக்களில் விளம்பரம் செய்யப்படும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் முடி உதிர்வது நின்ற பாடில்லை. ஆனால் அப்படி அவ்வளவு பணம் செலவழித்து முடியைப் பராமரிப்பதற்கு பதிலாக, இயற்கை வழிகளை நாடினால், நிச்சயம் முடி உதிர்வதைத் தடுத்து நிறுத்தலாம்.

வழுக்கை தலையாவதை தடுக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...

அதற்கு முதலில் முடி எதற்கு உதிர்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் முறையற்ற பராமரிப்பு தான். எனவே அதற்கு காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதோடு, அதனைக் கொண்டே முடியைப் பராமரித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு முடியைப் பராமரித்தால், முடி உதிர்வதைத் தடுப்பதோடு, அதன் வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.

நல்லெண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியைத் தூண்டும் சில காய்கறிகள் மற்றும் பழங்களின் ஜூஸ்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அதனைக் கொண்டு தவறாமல் முடியைப் பராமரித்தால், நிச்சயம் நல்ல மாற்றத்தைக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை ஜுஸ்

கற்றாழை ஜுஸ்

கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் முடியை வலிமையாக்குவதோடு, முடி உடைவதைத் தடுக்கும். மேலும் அதில் உள்ள நொதிகள், ஸ்கால்ப்பில் ஈரப்பசையை நிலைக்கச் செய்யும். இதனால் பொடுகுகள் நீங்குவதோ, தலை அரிப்பும் நீங்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை வாரம் ஒருமுடிற தலைக்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இதனால் முடி நன்கு பட்டுப்போன்று மென்மையாக வளரும்.

கிவி ஜுஸ்

கிவி ஜுஸ்

கிவி பழத்தில் முடியின் வளர்ச்சிக்கு வேண்டிய வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. மேலும் இந்த பழமானது உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். எனவே கிவி பழத்தை சாறு எடுத்து, அதில் தண்ணீர் சேர்த்து கலந்து, பின் தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காயத்தை சாறு எடுத்து அதனை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வது நின்று, அதன் வளர்ச்சியானது தூண்டப்படும். ஏனெனில் அதில் மயிர்கால்களுக்கு வேண்டிய சல்பரானது வளமாக நிறைந்துள்ளது.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே தலை அரிப்பு, ஒல்லியான முடி போன்றவற்றை சரிசெய்து, முடியின் அடர்த்தியை அதிகரிக்க பசலைக்கீரையை ஜூஸ் எடுத்து தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும்.

கொய்யாப் பழ ஜூஸ்

கொய்யாப் பழ ஜூஸ்

கொய்யாப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட் போன்றவை அதிகம் இருப்பதால், இதனை அப்படியே அல்லது ஜூஸ் எடுத்து உட்கொண்டு வந்தால், முடி உதிர்வதைத் தடுக்கலாம். இல்லாவிட்டால், கொய்யா பழத்தின் இலையை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அந்த நீரை குளிர வைத்து தலையில் மசாஜ் செய்து வந்தாலும், முடி உதிர்வது நின்று வளர்ச்சி அதிகரிக்கும்.

பூண்டு ஜூஸ்

பூண்டு ஜூஸ்

பூண்டுகளை ஜூஸ் எடுத்து, அதன் சாற்றினை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, முடி உதிர்வது நின்று, அதன் வளர்ச்சி தூண்டப்படும். மேலும் இது முடியை மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காயை சாறு எடுத்து தலையில் தடவி மசாஜ் செய்தால், முடி உதிர்வது நின்று, முடியின் தரம் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும். இதற்கு காரணம் அதில் உள்ள நொதிகள் தான். வேண்டுமானால் தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால், முடி பிரச்சனைகள் நீங்கிவிடும்.

கொத்தமல்லி ஜூஸ்

கொத்தமல்லி ஜூஸ்

கொத்தமல்லி கூட முடியின் வளர்ச்சியை தூண்ட உதவும். அதற்கு கொத்தமல்லியை அரைத்து, அதனை தலையில் நன்கு தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

கேரட்டில் நிறைந்துள்ள நன்மைகளைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இதில் உள்ள பீட்டா-கரோட்டின் கண்களுக்கு மட்டுமின்றி, முடிக்கும் மிகவும் நல்லது. மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், முடியை வலிமையாக வளர உதவி புரியும்.

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

வைட்டமின் சி உடலில் புரோட்டீன் அளவை அதிகரித்து, முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கும். எனவே முடிந்தால், இதனை சாறு எடுத்து தலையில் தடவி ஊற வைத்து அலசுங்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Juices That Help Further Hair Growth

Fresh fruits and vegetable juices will lessen the chances of hair breakage and thus help promote hair growth. The nutrition from juices get absorbed into our body quickly and the results will be faster. Here are few effective juices for hair growth.
Desktop Bottom Promotion