For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையில் ஒளிந்திருக்கும் சில தலைமுடி பராமரிப்பு இரகசியங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஓடுங்கள் உங்களுடைய சமையலறைக்கு! ஏனெனில் சமையலறையில் தலை முடியைப் பராமரிப்பதற்கு ஏற்றவாறு பல பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு தலை முடியைப் பராமரித்தால், முடிக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் பாதுகாப்புடன் இருக்கும்.

அதிலும் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது அலமாரியிலோ உள்ள பொருட்களை வைத்து நான்கு வகையான தலைமுடி மாஸ்க்குகளை உங்களால் இயற்கையான முறையில், பலனளிக்கும் வகையில் தயாரிக்க முடியும். இங்கு எந்த வகையான முடிக்கு, எந்த மாதிரியான மாஸ்க் போட்டால், நல்ல பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறண்ட முடி: ஆலிவ் எண்ணெய் மற்றும் பால்

வறண்ட முடி: ஆலிவ் எண்ணெய் மற்றும் பால்

உங்களுக்கு பெரிய அளவில் TLC தேவைப்படுகிறதா? மூன்று தேக்கரண்டி சுத்தமான ஆலிவ் எண்ணெயுடன், இரண்டு முட்டைகளை கலந்து, அந்த கலவையை 20 நிமிடங்களுக்கு உங்களுடைய தலைமுடியில் வைத்திருங்கள்.

முடி உடைந்த சிக்கிக் கொண்டிருப்பதை ஆலிவ் எண்ணைய் சரி செய்து கொண்டிருக்கும் போது, முட்டை ஆரோக்கியமான முடி வளர உறுதுணையாக இருக்கும்.

எல்லா முடிகளுக்கும்: வெண்ணெய் பழம் மற்றும் தேன்

எல்லா முடிகளுக்கும்: வெண்ணெய் பழம் மற்றும் தேன்

நன்கு வளர்ந்த வெண்ணைய் பழத்துடன், இரண்டு தேக்கரண்டிகள் சுத்தமான தேனை கலந்து அந்த கவையை முடியில் தடவி 20 நிமிடங்கள் பொறுமையாக காத்திருங்கள். பின்னர் முடியை அலசுங்கள்.

வைட்டமின்களும், ஊட்டச்சத்துக்களும் நிரம்பியிருக்கும் இயற்கையின் கொடை தான் வெண்ணைய் பழம். குறிப்பாக இந்த பழத்தில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் புரதங்கள் முடியை மிகவும் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இதற்கிடையில், தேன் ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு கருவியாக செயல்படுகிறது.

பிசுபிசுப்பான முடிக்கு: ஆப்பிள் சாறு காடி மற்றும் எலுமிச்சை

பிசுபிசுப்பான முடிக்கு: ஆப்பிள் சாறு காடி மற்றும் எலுமிச்சை

¼ கோப்பை ஆப்பிள் சாறு காடியை, எலுமிச்சை தோலுடன் கலந்து 15 நிடங்களுக்கு கலக்கி வைக்கவும். இந்த கலவை சரியாக செட் ஆனவுடன், மண்டைத் தோலில் உள்ள பிசுபிசுப்பான எண்ணெயை இந்த கலவை உறிஞ்சியவுடுன், தலையை அலசுங்கள்.

அழகு சாதனப் பொருட்கள் விட்டுச் செல்லும் பிசுபிசுப்புகளை ஆப்பிள் சாறு கடி நீக்கிவிடும். இந்த கலவை முடிக்கால்களை உறுதிப்படுத்தி, மென்மையாக்குவதல், உங்கள் தலைமுடி பளபளப்பாகிறது. மேலும், இது தலைமுடியின் pH அளவை சமனப்படுத்தி, பாக்டீரியாக்களை அழிப்பதால் பொடுகுகளையும் நீக்க முடியும்.

வறண்ட, சீரற்ற முடி: வாழை, தேன் மற்றும் பாதாம்

வறண்ட, சீரற்ற முடி: வாழை, தேன் மற்றும் பாதாம்

நன்கு வளர்ந்த வாழைப்பழத்தையும், 2 தேக்கரண்டிகள் தேனையும் எடுத்துக் கொண்டு, பாதாமுடன் சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை தலைமுடியில் போட்டு, 20 நிமிடங்களுக்குப் பின்னர் அலசுங்கள்.

முடியின் ஈரப்பதத்தை வாழைப்பழம் அதிகரிப்பதுடன், முடியை மென்மையாக வைத்து, அரிப்புடைய தலைச்சருமத்தை சரி செய்கிறது.

குறிப்பு

குறிப்பு

ஆகவே உங்களுடைய தலைமுடிக்கு மிகவும் ஏற்ற வழிமுறையை தேர்ந்தெடுத்து பயன் பெறுங்கள். மிகவும் விலை உயர்ந்த கண்டிஷனர்களை வாங்கி பயன்படுத்துவதை விட, உங்கள் வீட்டிலேயே தயாரிக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தி பாக்கெட் காலியாவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Beauty Secrets from Your Kitchen!

If you want healthy hairs than look up to these hair beauty secrets from your kitchen. Prepare these natural beauty tips from kitchen in an easy way.
Desktop Bottom Promotion