For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடிக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்க...

By Maha
|

வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடலுக்கு மட்டுமின்றி, சருமமும் பொலிவோடு அழகாக இருக்கும். அத்தகைய வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு பதிலாக, பொலிவிழந்து காணப்படும் முடிக்கு பயன்படுத்தினால், பட்டுப் போன்ற பொலிவான முடியைப் பெறலாம். எவ்வளவு தான் முடியைப் பராமரிப்பதற்கு நிறைய பொருட்கள் இருந்தாலும், இயற்கை முறையில் பராமரிப்பது போன்று இருக்காது.

அதிலும் வாழைப்பழத்தைக் கொண்டு முடிக்கு ஹேர் மாஸ்க் போட்டால், முடியானது வறட்சியடையாமல் இருப்பதோடு, முடியும் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும். ஏனெனில் வாழைப்பழத்தில் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், அவை முடிக்கு புத்துணர்ச்சி கொடுத்து, முடியை பொலிவாக்குகின்றன.

வாழைப்பழ ஹேர் பேக் செய்வது மிகவும் எளிமையானது. ஆனால் முடியில் உள்ள பிரச்சனையே போக்குவதற்கு ஏற்றவாறு, வாழைப்பழத்துடன் சேர்க்கும் பொருட்கள் மட்டும் அவ்வப்போது வேறுபடும். இப்போது வாழைப்பழத்தை எதனுடன் சேர்த்தெல்லாம் ஹேர் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்-தயிர் மாஸ்க்

வாழைப்பழம்-தயிர் மாஸ்க்

நன்கு கனிந்த 3 வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முடிக்கு தடவும் முன், முடியை வெதுவெதுப்பான நீரில் அலசி, பின் அந்த கலவையை முடி மற்றும் ஸ்கால்ப்பிர் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு, முடியை அலச வேண்டும். இதனால் முடி வறட்சியின்றி, பட்டுப்போன்று இருக்கும். மேலும் இந்த முறை முடி உதிர்தலையும் தடுக்கும்.

வாழைப்பழம்-அவகேடோ மாஸ்க்

வாழைப்பழம்-அவகேடோ மாஸ்க்

ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அவகேடோ மற்றும் தேங்காய் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முடியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, நீரில் அலசினால், முடிக்கு கண்டிஷனரே போடத் தேவையில்லை. அந்த அளவில் முடி பொலிவோடு மின்னும். இந்த ஹேர் மாஸ்க் முடி உடைதலைத் தடுக்கும்.

வாழைப்பழம்-கொக்கோ மாஸ்க்

வாழைப்பழம்-கொக்கோ மாஸ்க்

கனிந்த 2 வாழைப்பழத்துடன், கொக்கோ பவுடர், பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, அதனை முடி முழுவதும் மற்றும் ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் முடி நன்கு அடர்த்தியாகவும், ஆரோக்கியத்துடனும், நிறம் மாறாமல் வளரும்.

வாழைப்பழம்-முட்டை மாஸ்க்

வாழைப்பழம்-முட்டை மாஸ்க்

வாழைப்பழத்தை அரைத்து, அதில் 2 முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றி, 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முடியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, முடியை குளிர்ந்த நீரில் அலசினால், முடிக்கு புரோட்டீன் கிடைத்து, முடி வலுவோடு வறட்சியின்றி இருக்கும்.

வாழைப்பழம்-மயோனைஸ் மாஸ்க்

வாழைப்பழம்-மயோனைஸ் மாஸ்க்

3 டேபிள் ஸ்பூன் மயோனைஸ் மற்றும் 3 துளிகள் லாவெண்டர் எண்ணெயை, மசித்த 2 வாழைப்பழத்துடன் சேர்த்து பிசைந்து, கூந்தலில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து நீரில் அலச வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கினால், முடி பட்டுப்போன்று, வறட்சியின்றி, மென்மையாக இருக்கும்.

வாழைப்பழம்-பாதாம் மாஸ்க்

வாழைப்பழம்-பாதாம் மாஸ்க்

பிசைந்து வைத்துள்ள கனிந்த வாழைப்பழக் கூழில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முடியில் தடவி 15-30 நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் முடி ஆரோக்கியமாக வளரும்.

வாழைப்பழம்-தேங்காய் பால் மாஸ்க்

வாழைப்பழம்-தேங்காய் பால் மாஸ்க்

3 வாழைப்பழத்தை நன்கு பிசைந்து, அதில் சிறிது தேங்காய் பால் ஊற்றி கலந்து, முடியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து நீரில் அலசினால், முடி வறட்சியில்லாமல், பொடுகின்றியும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Try These Banana Hair Packs | முடிக்கு வாழைப்பழ ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணுங்க...

Banana hair packs will moisturise the hair and makes it smooth and silky. It contains vitamins, minerals and antioxidants which rejuvenates and revitalises the dull hair. Using banana hair packs prevent split ends, breakage and dandruff. So, try these banana hair packs.
Story first published: Tuesday, May 21, 2013, 13:07 [IST]
Desktop Bottom Promotion