For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா? இதை படிங்க...

By Maha
|

Baldness
வழுக்கைத் தலை பிரச்சினை இன்றைய இளைஞர்களுக்கு அதிகமாக இருக்கிறது. வழுக்கை வந்துவிட்டால் அந்த இடத்தில் மறுபடியும் கூந்தல் வளராது என்று நினைப்பது தவறு. தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு காரணமே போதிய இரத்த ஓட்டம் இல்லாததே ஆகும். கூந்தல் பெரும்பாலும் உதிர்வதற்கு புரதச் சத்து குறைவு, சரியான பராமரிப்பு இல்லாததும் முக்கிய காரணங்களாகும். கூந்தலானது படிப்படியாக உதிர்ந்து நாளடைவில் தலையானது வழுக்கை ஆகிறது. இதற்கு வழுக்கை ஏற்பட்ட இடத்தில் இயற்கை முறையிலான மருந்துகளை தடவினாலே கூந்தலானது வளரும் என்கின்றனர் நிபுணர்கள் அவர்களின் ஆலோசனையை படியுங்களேன்.

வலுக்கையை போக்க...

எலுமிச்சை-மிளகு விதைகள் : இது வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடி வளர்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த இயற்கை மருத்துவம். அதற்கு முதலில் எலுமிச்சை விதைகளையும், மிளகு விதைகளையும் நன்கு அரைத்து, நீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அப்போது சற்று எரிச்சலாகத் தான் இருக்கும். ஆனால் அது வழுக்கை உள்ள இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அங்கு கூந்தலை வளரச் செய்யும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்ய வேண்டும். இதனால் கூந்தலானது வழுக்கை ஏற்பட்ட இடத்தில் வளரும்.

அதிமதுரம் : அதிமதுரத்தை நன்கு அரைத்து, அதோடு பால் மற்றும் குங்குமப்பூவைக் கலந்து வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அதனை இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். பிறகு காலையில் எழுந்து அதனை குளிர்ந்த தண்ணீரில் அலசி விடலாம்.

வெங்காயம் : வெங்காயமும் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதனை வழுக்கை ஏற்பட்ட இடத்தில் காலை மற்றும் மாலையில் சிவப்பு நிறத்தில் ஆகும் வரை தேய்க்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் தேனைத் தொட்டு தேய்க்க வேண்டும்.

துவரை : துவரம் பருப்பை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து தினமும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆரோக்கியமாக கூந்தல் வளர...

1. தேங்காய் எண்ணெயை எலுமிச்சை சாற்றில் கலந்து, கூந்தலுக்கு தடவி குளித்து வந்தால், கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம். மேலும் கூந்தலும் நன்கு வளரும்.

2. உளுந்து மற்றும் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து பேஸ்ட் போல செய்து தலைக்கு தடவி ஊறவைத்து குளிக்கலாம். இதனால் கூந்தலானது நீளமாக வளரும்.

3. ஆமணக்கெண்ணெயை தினமும் கூந்தலுக்கு தடவ வேண்டும். இதனால் கூந்தலானது அழகாக, அடர்த்தியாக வளரும்.

English summary

home remedies for baldness | கூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா? இதை படிங்க...

There are lots of reason for hair falling and baldness. Certain home remedies have also been found beneficial in the treatment of patchy baldness. some of the home remedies are given below.
Desktop Bottom Promotion