For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் துர்நாற்றத்தை விரட்டுவது எப்படி?

By Srinivasan P M
|

சரியாக கவனிக்கவில்லை என்றால் உடல் நாற்றம் ஒருவருடைய ஒட்டுமொத்த தோற்றத்தையே குறைத்து மதிப்பிட வைக்கும். உடல் நாற்றம் உங்களை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

சில சமயம் நீங்க என்ன தான் டியோடரண்ட்டிலேயே குளிச்சாலும் உடல் நாற்றம் மட்டும் போவதில்லை. இதுப்போன்ற தருணங்களில் இதற்கு ஏதாவது நிரந்தரத் தீர்வு கிடைக்காதா என்று நீங்கள் ஏங்குவதுண்டு. அதனால் இதிலிருந்து விடுபட எளிதான 4 வழிகள் உங்களுக்காக இதோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சில விஷயங்களை நீங்கள் கடைப்பிடிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உண்ணுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இவை சருமத் துவாரங்கள் வழியாக தேவையற்ற துர்நாற்றத்தைப் பரப்பும். வெங்காயத்தை நீங்கள் என்ன தான் வாசனைப் பொருட்கள் சேர்த்து சமைத்தாலும், அவற்றை சற்று விலக்கியே வைப்பது நல்லது.

இருமுறை குளியுங்கள்

இருமுறை குளியுங்கள்

அவ்வப்போது பாத்ரூம் போங்க... ஆமாங்க தொடர்ந்து குளியுங்க. வெயில் அதிகம் இருக்கும் நேரங்களில் ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பது சிறந்தது. இது உங்களின் பல பிரச்சனைகளை தீர்த்து வைக்கும்.

டால்கம் பவுடர்

டால்கம் பவுடர்

இன்றைக்கு இந்த விஷயம் மிகவும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றாக உள்ளது. ஆனால் இது மிகவும் பலன் தரக்கூடிய ஒன்று. பவுடர் உங்களை வெயில் காலங்களில் புத்துணர்ச்சியுடன் வைப்பதுடன், உங்கள் உடல் நாற்றத்தை குறைக்கவும் உதவும்.

டியோடரண்ட்

டியோடரண்ட்

வியர்வையை கட்டுப்படுத்தும் டியோடரண்ட்டை உபயோகியுங்கள். இது உங்களை புத்துணர்வு மணத்துடன் வைப்பது மட்டுமல்லாமல், உங்களின் வியர்வையையும் கட்டுக்குள் வைக்கும். வெயில் காலங்களில் உங்களுக்கு அதிகமாக வியர்ப்பதால், உங்கள் உடலில் வாடை வீசும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Keep Body Odour At Bay

Body odour can become a real dampener to your personality if proper care is not taken. Here's how to keep body odour at bay.
Desktop Bottom Promotion