For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்ணில் ஏற்படும் கருவளையத்திற்கான வீட்டு சிகிச்சைகள்!!!

By Super
|

ஒருவருடைய அழகை பிரதிபலிப்பது கண்களே. எப்போதும் சரும நிறத்தை விட கண்களே ஒருவரின் அழகை அதிகரித்து காட்டும். அதிலும் அனைவருக்குமே, முக்கியமாக பெண்களுக்கு, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தங்களின் கண்களை சிறந்த முறையில் பாதுகாக்க விரும்புவர். "நீங்கள் ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று பலரும் உங்களிடம் கேட்பதை விரும்ப மாட்டீர்கள் அல்லவா?

ஆனால் பல காரணங்களுக்காக கண்களில் சுற்றி கருவளையமும் வீக்கமும் ஏற்படும். அதில் ஹார்மோன் மாற்றங்கள், பலதரப்பட்ட அலர்ஜிகள், நஞ்சுக்கள், தூசிகள், தண்ணீர் தேங்குதல் அல்லது பரம்பரை காரணங்களால் கண்கள் சோர்வாக ஆகலாம். அதனால் முகமும் கலையிழந்து போகும்.

மேலும் நம்மில் பல பேர் தூக்கத்தை இழப்பதால் மற்றும் போதிய தூக்கம் இல்லாததால், கண்கள் வீங்கிய நிலைக்கு போகும். மேலும் அயர்ச்சியையும் ஏற்படுத்தும். தூக்கமே கண்களில் ஏற்படும் கருவளையத்திற்கும், வீக்கத்திற்கும் சிறந்த இயற்கை வைத்தியமாகும். வாழ்க்கை முறை போதிய தூக்கத்தை அளிக்கவில்லை என்றால் இதற்கு வேறு சில எளிய வைத்தியங்களும் உள்ளன. இந்த பாட்டி வைத்தியங்களை கடைப்பிடித்தால் கண் அயர்ச்சியும், கருவளையமும் ஓடியே போகும்.

Home remedies for eye bags

குளிர்ந்த வெள்ளரிக்காய்கள்:

கண்ணில் வரும் கருவளையங்களுக்கு ஒரு மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது மிகவும் குளிர்ந்த வெள்ளரிக்காய்கள். வெள்ளரிக்காய்களில் உள்ள அதிகமான நீர்ச்சத்து வீங்கிய கண் பட்டைகளுக்கு எதிராக இயற்கை பாதுகாவலாக விளங்கும். இது கண் வீக்கத்தை குறைத்து முகத்திற்குப் பொலிவைக் கொடுக்கும்.

அதிலும் ஓய்வெடுக்கும் வேளையில், தலையை பின்னால் நன்கு சாய்த்து, நல்ல தடிமனான வெள்ளரித் துண்டுக்களை எடுத்து, கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதுவும் இந்த துண்டுகள் வெப்பம் ஆகும் வரை கண்களின் மேலே அது இருக்கவும் வேண்டும்.

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்த குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரி:

குளிர்ந்த ஸ்ட்ராபெர்ரியில் அதிக அளவு ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி உள்ளதால், அவை கண்களின் கருவளையங்களை குணப்படுத்த பெரிதும் உதவும். இயற்கை பொருளான இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைக்க உதவும். அதனால் தான் முகத்திற்கு தடவும் விலை உயர்ந்த பல க்ரீம்களில் இந்த ஆல்ஃபா- ஹைட்ராக்ஸி கலக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே கண்களின் கருவளையம் நீங்கி, கண்கள் ஜொலிக்க செய்ய வேண்டியதெல்லாம், குளிர்ந்த பெரிய அளவிலான ஸ்ட்ராபெர்ரியின் தோல்களை நீக்கி, 3 மி.மீ தடிமானத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஓய்வெடுக்கும் வேளையில், இந்த துண்டுகளை கண்களின் மேல் சில நிமிடம் வைத்து விட்டு, பிறகு முகத்தை கழுவுங்கள்.

ஆலிவ் எண்ணெயில் ஊற வைத்த குளிர்ந்த தேநீர் பை:

இது மிகவும் எளிய முறை என்றாலும் கூட, கண்களின் கருவளையம், வீங்கிய கண் பட்டைகள் மற்றும் கண் அயர்ச்சி போன்றவைகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. ஈரமான தேநீர் பையை குளிர்சாதனப் பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் வைக்கவும். பின் அவைகள் நன்கு குளிர்ந்த நிலைக்கு வந்த பின்பு, சிறிய அளவிலான பஞ்சு உருண்டையை ஆலிவ் எண்ணெயில் நனைத்து, அந்த எண்ணெய்யை கண் பட்டையில் தடவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஃப்ரீசரில் இருந்து தேநீர் பையை எடுத்து கொண்டு, ஓய்வெடுக்கும் போது தலையை நன்கு பின்புறம் சாய்த்து, கண்களின் இமைகளின் மேல் இந்த தேநீர் பையை ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பின் அதனை எடுத்துவிட்டு, மாய்ஸ்சரைசரை தடவிக் கொள்ள வேண்டும்.

English summary

Home remedies for eye bags

Eyes reflect one’s personality. Eyes offer an elegant look to your face more than complexion. Everyone especially girls, love to be cosseted and grab oodles of attention. So, they want to take care of their eyes in the best possible way.
Desktop Bottom Promotion