For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாத பராமரிப்பிற்கு நேச்சுரல் ஸ்கரப்களை ட்ரை பண்ணலாமே!!!

By Maha
|

உடல் அழகாக இருப்பதற்கு நிறைய உடல் பராமரிப்புகளை மேற்கொள்வோம். அதிலும் தலை முதல் கால் வரை பல பராமரிப்புகளை அவ்வப்போது செய்வோம். ஆனால் அத்தகைய பராமரிப்புகளில் பொதுவாக செய்வதென்றால் அது கைகளுக்கு தான். ஏனெனில் வெளியே செல்லும் போது, வெயிலில் அதிக நேரம் சுற்றுவதால், கைகளின் நிறம் மாறிவிடும். சொல்லப்போனால், கைகளின் நிறத்தை பார்க்கும் போது, மற்ற இடங்களை விட கைகள் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். எனவே கைகளுக்கு நிறைய பராமரிப்புகளை மேற்கொள்வோம்.

ஆனால் சில சமயங்களில் என்ன பல நேரங்களில் பாதங்கள் ஒன்று உள்ளதை மறந்துவிடுவோம். சொல்லப்போனால், எப்படி அழகில் கைகள் முக்கியப் பங்கு வகிக்கிறதோ, அதேப் போன்று தான் பாதங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகவே அதனை சரியான முறையில் அவ்வப்போது பராமரிக்க வேண்டும். ஏனென்றால், பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லாததால், அவை எளிதில் வறட்சி அடைந்துவிடும். எனவே அவற்றிற்கு முறையான பராமரிப்பானது அவசியமாகிறது. அதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிதான முறையில் இரவில் படுக்கும் போது, அவ்வப்போது ஆயில் மசாஜ், ஸ்கரப் என்று செய்ய வேண்டும்.

இல்லையெனில் பாதங்கள் வறட்சியடைந்து, பித்தவெடிப்புகள், பழுப்பு நிற சருமம், கால்களில் துர்நாற்றம் என்ற பிரச்சனைகள் வந்துவிடும். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல், பாதங்களைப் பராமரிக்க அவ்வப்போது பாதங்களுக்கு ஸ்கரப் செய்ய வேண்டும். இப்போது அத்தகைய ஸ்கரப்களை வீட்டில் இருந்தபடியே, எந்த பொருட்களையெல்லாம் பயன்படுத்தி ஸ்கரப் செய்யலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உப்பு

உப்பு

நிறைய மக்கள் ஸ்கரப் என்றாலே உப்பைத் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் உப்பைப் பயன்படுத்தி ஸ்கரப் செய்தால், உடலில் உள்ள பாக்டீரியாக்கள் முற்றிலும் வெளியேறுவதோடு, உடல் தசைகள் ரிலாக்ஸ் ஆகும். அதற்கு உப்பில் ஆலிவ் ஆயிலை கலந்து, பாதங்களில் தடவி ஸ்கரப் செய்தால், பாதங்கள் நன்கு பொலிவோடு, மென்மையாக இருக்கும்.

சர்க்கரை

சர்க்கரை

உப்பை போன்றே சர்க்கரையும் ஒரு ஸ்கரப் செய்வதற்கு ஏற்ற பொருள். அதிலும் முகத்திற்கு ஸ்கரப் செய்ய சர்க்கரையைப் பயன்படுத்தினால், அத்துடன் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து தான் பொதுவாக செய்வார்கள். அதுவே பாதங்களுக்கு என்றால், ப்ரௌன் சர்க்கரையுடன், சிறிது வெண்ணிலா எண்ணெய் சேர்த்து கலந்து பாதத்தில் தடவி ஸ்கரப் செய்தால், பாதங்கள் ரிலாக்ஸ் ஆவதோடு, பாதங்களில் உள்ள துர்நாற்றம் போய் நன்கு நறுமணத்துடன் இருக்கும்.

காபி தூள்

காபி தூள்

காப்பியின் வாசனையை நுகர்ந்தால், மனம் நன்கு புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதேப் போல், அந்த காப்பி பொடியை பயன்படுத்தி, பாதங்களுக்கு ஸ்கரப் செய்தால், பொலிவிழந்து உள்ள பாதங்கள் பொலிவோடு இருக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு ஓட்ஸ் ஒரு சிறந்த பொருள். மேலும் இதனைப் பயன்படுத்தி ஸ்கரப் செய்தால், பாதங்கள் மென்மையாக இருப்பதோடு, ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு ஓட்ஸை அரைத்து பொடி செய்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்ய வேண்டும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் உடல் ஆரோக்கியத்தில் எவ்வளவு சிறந்தது என்று அனைவருக்குமே தெரியும். அதேப் போன்று அழகுப் பராமரிப்பிலும் பொரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக பாதங்களில் ஏற்படும் வறட்சியை முற்றிலும் போக்குவதற்கு, பாதாம் எண்ணெயை பாதங்களில் தடவி, மசாஜ் செய்து வந்தால், பாதங்கள் வறட்சியின்றி இருப்பதோடு, பழுப்பு நிற சருமம் வராமல் இருக்கும்.

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெய்

இந்த எண்ணெய் ஒருவித நாற்றத்தை உடையது. ஆனால் அதே சமயம் இது அழகுப் பராமரிப்பிலும் பயன்படுகிறது. மேலும் இது மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய எண்ணெய். எனவே இந்த எண்ணெயை அரைத்த ஓட்ஸ் உடன் சேர்த்து கலந்து, பாதங்களுக்கு ஸ்கரப் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

பாதங்களுக்கு செய்யும் ஸ்கரப்பிலேயே ஸ்ட்ராபெர்ரி தான் சிறந்தது. அதிலும் இதனை உப்புடன் சேர்த்து பாதங்களுக்கு ஸ்கரப் செய்தால், நன்கு பட்டுப் போன்று பொலிவோடு இருக்கும். இல்லையெனில் ஒரு பௌலில் ஸ்ட்ராபெர்ரியை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் பாதாம் எண்ணெய், 2 வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, சிறிது உப்பு சேர்த்து கலந்து, பாதங்களில் தடவி ஸ்கரப் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Ingredients For Scrubbing Foot | பாத பராமரிப்பிற்கு நேச்சுரல் ஸ்கரப்களை ட்ரை பண்ணலாமே!!!

Homemade scrubs for feet are something that are beneficial for the feet and are inexpensive too. These simple ingredients that are found in our kitchen can be used to make good foot scrubs which leaves the feet smooth and soft.
Story first published: Wednesday, February 13, 2013, 12:27 [IST]
Desktop Bottom Promotion