Tap to Read ➤

பலரும் அறியாத பூண்டின் சில பக்கவிளைவுகள்!

ஆயிரம் வருடங்களாக சமையலில் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருள் தான் பூண்டு. மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பூண்டு பல நோய்களைத் தடுக்க உதவுகிறது.
Maha Lakshmi S
பூண்டு எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், இதில் சில பக்கவிளைவுகளும் உள்ளன. இதை ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
பூண்டில் உள்ள பல்வேறு கெமிக்கல்கள் கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
அளவுக்கு அதிகமாக பூண்டு சாப்பிட்டால், அதில் உள்ள அல்லினேஸ் சரும எரிச்சல் மற்றும் சரும அரிப்பு போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.
பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டால், அது தலைவலியைத் தூண்டிவிடும்.
யோனி தொற்றால் அவதிப்படும் பெண்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது ஈஸ்ட் தொற்றின் வளர்ச்சியைத் தூண்டி, தொற்றை தீவிரப்படுத்திவிடும்.
அளவுக்கு அதிகமாக பூண்டு சாப்பிட்டால், அது வாந்தி மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.