Tap to Read ➤

ஆரஞ்சு தவிர வைட்டமின் சி அதிகம் நிறைந்த டாப் 10 உணவுகள்!

வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலம் உடலுக்கு வேண்டிய மிகவும் அத்தியாவசியமான வைட்டமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும்.
Maha Lakshmi S
இது நரம்பியக்கடத்திகளுக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் இது அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க மிகவும் அவசியமான ஒன்று.
நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் எலும்பு, தோல், பற்கள் மற்றும் மூட்டுகளின் பராமரிப்புக்கு வைட்டமின் சி இன்றியமையாதது.
வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் மட்டும் தான் அதிகம் உள்ளது என்று நாம் கூறுவோம். ஆனால் வேறு சில பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் வைட்டமின் சி போதுமான அளவு நிறைந்துள்ளது. அந்த உணவுகள் பின்வருமாறு:
100 கிராம் கொய்யாப்பழத்தில் 228.3 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் எலுமிச்சையில் 77 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் அன்னாசிப்பழத்தில் 47.8 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் ஸ்ட்ராபெர்ரியில் 58.8 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் கிவி பழத்தில் 92.7 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் மாம்பழத்தில் 36.4 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் பப்பாளியில் 60.9 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் ப்ராக்கோலியில் 89 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் கேல் கீரையில் 120 மிகி வைட்டமின் சி உள்ளது.
100 கிராம் சிவப்பு குடைமிளகாயில் 152 மிகி வைட்டமின் சி-யும், மஞ்சள் குடைமிளகாயில் 341 மிகி வைட்டமின் சி-யும் உள்ளது.