Tap to Read ➤

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யக்கூடாத விஷயங்கள்!

மாதவிடாய் கால ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது பல நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
Maha Lakshmi S
மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒருசில விஷயங்கள் கட்டாயம் தவிர்த்தாக வேண்டும். அவை பின்வருமாறு:
ஒரே நேப்கினை நீண்ட நேரமாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது பல தொற்றுநோய்கள் அல்லது அலர்ஜிக்கு வழிவகுக்கும்.
மாதவிடாய் காலத்தில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்காதீர்கள். லேசான உடற்பயிற்சிகளையாவது செய்யுங்கள்.
மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் ஆற்றலின்றி இருக்கும். எனவே உணவுகளை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்.
மாதவிடாயின் போது ஆரோக்கியமற்ற உணவுகள் உண்பதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்.
யோனியை கெமிக்கல் கலந்த பொருட்களால் சுத்தம் செய்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் அது அப்பகுதியில் எரிச்சலுக்கு வழிவகுக்கும்.
மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக இருப்பதால், சருமம் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கும். இந்நிலையில் வேக்சிங், த்ரெட்டிங் போன்றவற்றை செய்தால் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும்.
மாதவிடாய் காலத்தில் பால் பொருட்களை அதிகமாக சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது அடிவயிற்று வலியை தீவிரமாக்கும் மற்றும் வயிற்று உப்புசத்தை உண்டாக்கும்.