Tap to Read ➤

ஜிம்மில் அதிக நேரத்தை செலவிடும் தென்னி ந்திய நடிகைகள்!

தற்போது பல தென்னிந்திய நடிகைகள் இந்திய சினிமா துறையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அதில் சமந்தா, ராஷ்மிகா மற்றும் தமன்னா போன்றோர் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
Maha Lakshmi S
பல நடிகைகள் ஃபிட்டாக இருப்பதற்கு நீண்ட நேரம் ஜிம்மில் நேரத்தை செலவழித்து வருகிறார்கள். அப்படி ஜிம்மில் அதிக நேரத்தை செலவழித்து ஃபிட்டாக இருந்து பலருக்கும் ஒரு உத்வேகம் தரும் நபராக இருக்கும் நடிகைகள் யார்யார் என்பதைப் பார்ப்போம்.
நடிகை சமந்தா அடிக்கடி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஜிம்மில் பல்வேறு உடற்பயிற்சிகளை செய்வது போன்ற போட்டோக்களை வெளியிடுவதை கொண்டு, இவர் தனது ஆரோக்கியத்தில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறார் என்பதை அறியலாம்.
நடிகை தமன்னா யோகாவைத் தவிர, ஜிம்மிலும் அதிக நேரத்தை செலவிடுவார். அதுவும் இவர் பளு தூக்குதல் முதல் பாடிவெயிட் உடற்பயிற்சிகள் வரை அனைத்தையும் செய்வாராம்.
நடிகை அமலாபால் தீவிரமாக யோகாசனம் செய்யக்கூடியவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல் இவர் ஜிம்மிலும் அதிக நேரத்தை செலவிடுவாராம்.
புஷ்பா பட நடிகையான ராஷ்மிகா மந்தனா கூட தினமும் தவறாமல் ஜிம்மிற்கு செல்வார். இதுவே இவரது ஃபிட்டான உடலுக்கு முக்கிய காரணம்.
தென்னிந்தியாவில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் பெயர் பெற்றவர் தான் காஜல் அகர்வால். இவர் தினமும் ஜிம்மிற்கு சென்று ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் முதல் ப்ரீ ஹேண்ட் உடற்பயிற்சிகள் வரை செய்வாராம்.
நடிகை ரகுல்ப்ரீத் சிங் கூட ஃபிட்டாக இருக்க ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சியை செய்வாராம்.
நடிகை லாவண்யா திரிபாதி கூட அதிக நேரம் ஜிம்மில் நேரத்தை செலவழிக்கக்கூடியவர்.