Tap to Read ➤

தினமும் பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

நட்ஸ்களில் ஒன்றான பாதாம் பல வழிகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட நீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
Maha Lakshmi S
பாதாமில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் போன்றவை வளமான அளவில் உள்ளது.
நீரில் ஊற வைத்த பாதாம் லிபேஸ் என்னும் நொதியை வெளியிட உதவி புரிந்து, கொழுப்புக்களை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை சாப்பிடும் போது, அது உடல் எடையை திறம்பட குறைக்க உதவுகிறது.
பாதாமில் வைட்டமின் ஈ, கொழுப்பில் கரையக்கூடிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
தினமும் ஒரு கையளவு ஊற வைத்த பாதாமை சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலைப் பராமரிக்க உதவும்.
பாதாமில் மக்னீசியம் அதிகம் உள்ளது. டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு மக்னீசியம் மிகவும் முக்கியமான சத்து. இச்சத்து இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது.
தினமும் ஒரு கையளவு ஊற வைத்த பாதாமை சாப்பிடுவது ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெற உதவும்.