Tap to Read ➤

எகிறும் தக்காளி விலை: தக்காளிக்குப் பதில் பயன்படுத்தக் கூடிய பொருட்கள்

சமையலில் தக்காளிக்கு பதிலான மாற்று பொருள்
abinaya narayanan
சாண்விட்ச், சாலட்டுகளை தினமும் சாப்பிடுபவராக இருந்து, அவற்றில் தக்காளிக்கு பதிலாக சிவப்பு குடைமிளகாயை பயன்படுத்தலாம்.
இந்திய சமையலில் தக்காளிக்கு ஒரு சிறந்த மாற்றாக தயிர் விளங்கும்.
தக்காளிக்கு சிறந்த மாற்றாக பூசணிக்காய் இருக்கும். குறிப்பாக பூசணிக்காயை கூழ் வடிவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாற்றுப் பொருளை அனைத்து சமையலிலும் பயன்படுத்த முடியாவிட்டாலும், சில இனிப்பு சேர்க்கக்கூடிய சமையலிலாவது தக்காளி கெட்சப்பை பயன்படுத்தலாம்.
தக்காளிக்கு பிறகு, ஒரு தனித்துவமான புளிப்புச் சுவையைக் கொண்ட பொருள் என்றால் அது வினிகர்.
புளியின் சுவை தக்காளியின் சுவையை சற்று ஒத்திருக்கும்.
வீட்டில் தக்காளி இல்லாத போது, சமைக்கும் உணவில் சிறிது மாங்காய் தூளை சேர்த்துக் கொண்டால், அது உணவின் சுவையை கூட்டிக் காட்டும்.
சாண்விட்ச் அல்லது சாலட்டுகளை செய்யும் போது, தக்காளிக்கு இணையான சுவையைப் பெற நினைத்தால், சிறிது சீஸை துருவி சேர்த்துக் கொள்ளுங்கள்.