Tap to Read ➤

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் - இனிப்பு மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
abinaya narayanan
* பச்சை மாங்காய் - 1
 * மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1/2 கப்
 * மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
 * உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
 * வரமிளகாய் - 3-4
 * பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை 
* வேப்பம்பூ - சிறிது
தேவையான பொருட்கள்
மாங்காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, நீரை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
அதே வேளையில் மற்றொரு அடுப்பில் வெல்லத்தை எடுத்து அத்துடன் 1/4 கப் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.
வெல்லப் பாகுவை வடிகட்டி நன்கு வெந்துள்ள மாங்காயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறிவிடுங்கள்.
வேண்டுமானால் இத்துடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவை 2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து, மாங்காயுடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் வேப்பம்பூ சேர்த்து 10 நொடிகள் வதக்கி விடுங்கள்.
இறுதியாக தாளித்ததை மாங்காய் பச்சடியில் சேர்த்து கிளறினால், மாங்காய் பச்சடி தயார்