Tap to Read ➤

ஜிம்மிற்கு போறதுக்கு முன் இந்த உணவுகளை சாப்பிட்டா சோர்வடைய மாட்டீங்க..

Jan 3, 2023
Maha Lakshmi S
கட்டுக்கோப்பான அழகான உடலமைப்பை பெற பலரும் ஜிம்மிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்யும் போது மிகவும் சோர்வடைகிறீர்கள் என்றால் சில உணவுகளை சாப்பிடுவது உற்சாகத்தையும், அமைதியையும் உணர முடியும்
ஜிம்மிற்கு செல்ல திட்டமிடுபவர்கள், உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சாப்பிட வேண்டிய உணவுகள்...
ஓட்ஸ்
ஓட்ஸ் மாதிரியான உணவுகள் உடல் தசைகளை வேலை செய்வதற்குத் தயார்படுத்த உதவுவதோடு, சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவிடும்
யோகர்ட்
யோகர்ட் புரதத்தின் சிறந்த மூலமாகும். இது தசை சேதத்தைத் தடுக்க உதவுவதோடு, வலியிலிருந்து மீள ஊக்குவிக்கிறது
ஹோல் கிரைன் பிரட்
சிறிது சாப்பிட்டாலும் நீண்ட நேரத்தில் உடலுக்கான ஆற்றலை அளித்திடும். இந்த பிரட் வகைகள் கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த ஆதாரம்
பழங்கள்
உடற்பயிற்சிக்கு முன்பு ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுவது உடல் மந்தமாகாமல் இருக்க உதவிடும்
பீனட் பட்டர் ஸ்மூத்தி
புரோட்டீன் நிறைந்த இதுமாதிரியான உணவுகள், ஜிம்மிற்கு செல்வோருக்கு ஒரு சிறந்த உணவு. இது தசைகளின் வேகமான கட்டமைப்பிற்கு பெரிதும் உதவிடும்
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்கள் தீவிரமான உடற்பயிற்சிகளுக்கு உடனடி ஆற்றலை வழங்கக்கூடிய அற்புதமான உணவாகும்