Tap to Read ➤

ஓணம் சத்யாவின் 10 பாரம்பரிய உணவுகள்!

பத்து நாள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையில், திருவோணம் அல்லது ஓணத்தின் பத்தாம் நாள் நெருங்கி வரும் நிலையில், அனைவரும் ஓணம் சத்யா பற்றி அதிகம் பேசுவோம். ஓணம் பண்டிகையின் முக்கிய பகுதியே ஓணம் சத்யா தான். ஓணம் சத்யா உணவுகள் ஓர் பார்வை...
Maha Lakshmi S
களன் ஓணம் சத்யாவின் மிக முக்கியமான உணவாகும். கெட்டியான தயிரில் இருந்து தயாரிக்கப்படும் களன் சிறந்த பண்டிகை உணவாகும்.
ஓலன் என்பது பூசணி மற்றும் பருப்புகளால் தயாரிக்கப்படும் உணவாகும். இது தேங்காய் பாலை மூலமாக கொண்ட செய்யப்படுவது. இது சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும்
அவியல் கேரளாவில் மிகவும் பிரபலமானது. கேரளாவில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் அடிக்கடி செய்யப்படக்கூடிய ஒரு ரெசிபி. இது தேங்காய் மற்றும் பல்வேறு காய்கறிகள் சேர்த்து செய்யப்படுவது
ஓணம் சத்யாவில் முக்கிய இடம் பிடிப்பது பச்சடி. பச்சடியில் பல்வேறு வகைகள் உள்ளன. அதிலும் சிறப்பானது அன்னாசிப்பழ பச்சடி. அதன் சுவை இனிப்பு மற்றும் நட்ஸ் சேர்த்து அருமையாக இருக்கும்
இஞ்சி புளி ஒரு சட்னி வகை. இதன் சுவை மிகவும் தனித்துவமானது. இஞ்சி மற்றும் புளி சேர்த்து தயாரிக்கப்படும் இது ஓணம் சத்யாவில் கண்டிப்பாக இடம் பெறும்
வெடுகப்புளி என்பது எலுமிச்சையின் ஒரு வடிவம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் ஊறுகாயின் சுவை அற்புதமாக இருக்கும். இந்த ஊறுகாய் இல்லாமல் ஓணம் சத்யா முழுமையடையாது
தோரன் என்பது தமிழ்நாட்டில் செய்யப்படும் பொரியல் வகை தான். ஒரு ட்ரை ரெசிபி. தோரன் பொதுவாக கேரட், முட்டைக்கோஸ் மற்றும் பீன்ஸ் சேர்த்து செய்யப்படும்
தென்னிந்தியாவில் பிரபலமானது சாம்பார். இது சாத்யாவில் அடிப்படையான ஒன்று மற்றும் முக்கியமாக சாதத்துடன் பரிமாறப்படும்
நேந்திரம் சிப்ஸ் கேரளாவில் ஆல் டைம் ஃபேவரைட். அன்றாட தீனியாகவே இந்த சிப்ஸ் சாப்பிடப்படுகிறது. விருந்து என்றால் அதில் நிச்சயமாக அப்பளம் இடம் பிடிப்பது தென்னிந்திய வழக்கம்
பாலாடை பாயாசம் சத்யாவின் இறுதியில் பரிமாறப்படும் இனிப்பு பானம். பாயாசத்தை அப்பளத்துடன் சாப்பிடுவது அருமையாக இருக்கும்