Tap to Read ➤

புத்தாண்டில் கடைப்பிடிக்கப்படும் உலகின் பாரம்பரிய உணவு வழக்கங்கள்!

Dec 30, 2022
Maha Lakshmi S
2023 தொடங்கவிருக்கும் நிலையில், அதன் கொண்டாட்டத்தையும் அனைவரும் திட்டமிட்டிருப்பீர்கள். அப்படி, உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று சில பாரம்பரிய உணவு பழக்கங்கள் அதிர்ஷ்டத்திற்காக கடைபிடிக்கப்படுகின்றன
உலகில் நடைமுறையில் உள்ள சில சுவாரஸ்யமான புத்தாண்டு உணவு பழக்கங்கள்
மெக்சிகோ
ரோஸ்கா டி ரெய்ஸ், இது ஐரோப்பாவிலிருந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மெக்சிகோவில் இருக்கும் ஒரு இனிப்பு பாரம்பரிய ரொட்டி வகை
கிரீஸ்
வசிலோபிதா, இது புத்தாண்டை கொண்டாடுவதற்காக அன்று நள்ளிரவில் பரிமாறப்படும் பாரம்பரிய கிரேக்க கேக் வகை
அயர்லாந்து
பட்டர் பிரெட், அயர்லாந்து மக்கள் இதை சாப்பிட்டு தங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். இது புத்தாண்டு தினத்தை கொண்டாடும் பழைய ஐரிஷ் வழக்கம்
ஜப்பான்
சோபா நூடுல்ஸ், புத்தாண்டு அன்று இதை சாப்பிடுவதால் ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த பழக்கம் 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது
தென் அமெரிக்கா
வெள்ளை காராமணி மசாலா, இந்த உணவை புத்தாண்டு தினத்தன்று சாப்பிடுவது ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்பது நம்பிக்கை
ஸ்பெயின்
ஸ்பெயினில் புத்தாண்டு பிறக்கும் போது சரியாக நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சைகளை சாப்பிடுவது ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ளது
ஈரான்
குகு சப்ஜி, இதை உண்பதன் மூலம், ஆண்டு முழுவதும் செழிப்பாக இருப்பதோடு, நல்ல நில வளம் கிடைக்கும் என்று அந்நாட்டு மக்களால் நம்பப்படுகிறது
ஜெர்மனி
சுகரி பிக், அதாவது சர்க்கரை மற்றும் பாதாம் மாவினால் பன்றி உருவத்தில் செய்யப்பட்ட இனிப்பை புத்தாண்டு அன்று சாப்பிடுவது பாரம்பரியமாக கருதப்படுகிறது