Tap to Read ➤

இந்திய தேசியக் கொடி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்கு முன்பு ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்தியாவின் கொடியாகும். மூவர்ணக் கொடி பற்றி சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
Maha Lakshmi S
நீள்சதுர வடிவில் உள்ள இந்த கொடியில், மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் உண்டு. கொடியின் நடுவில், நீல வண்ண நிறத்தில் அசோகச் சக்கரம் எனக் கூறப்படும் 24 ஆரங்களைக் கொண்ட சக்கரம் உண்டு.
முதன்முதலில் இந்திய தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கைய்யாவின் கொடியில் இராட்டை சின்னம் இடம் பெற்றிருக்கும்.
அசோக சக்கரத்துடன் கூடிய இந்திய தேசியக் கொடியை சுரையா தியாப்ஜி எனும் பெண் வடிவமைத்தார்.
சர்வதேச அரங்கங்களில் இந்திய நாட்டின் தனிச்சிறப்பு வாய்ந்த அடையாளமாக திகழ்வது நமது மூவர்ணக்கொடி
இந்திய தேசியக்கொடியை தயாரிக்கும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனம் கர்நாடாகாவில் உள்ள கர்நாடக காதி மற்றும் கிராம்யோக சம்யுக்தா சங்கம் மட்டும் தான்.
முக்கியமாக இந்திய தேசியக்கொடியை கைராட்டையால் நூற்கப்பட்ட கதர் துணியில் மட்டுமே தயாரிக்க வேண்டும்.
இந்திய தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள அளவீடுகளில் மட்டுமே மூவர்ணக்கொடியின் அளவு, பயன்படுத்தப்படும் நூல்களின் எண்ணிக்கை மற்றும் தரம், சாயங்கள் ஆகியவை இருக்க வேண்டும்.
எந்தவிதமான பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் பார்வையாளர்களின் இடப்பக்கத்தில் கொடி கம்பம் அமைத்து அதன் வலப்பக்கத்தில் கொடி பறக்க விடப்பட வேண்டும்.
1953-ஆம் ஆண்டு மே 29-ஆம் தேதி உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்டில் இந்திய தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது.