Tap to Read ➤

குளிர்காலத்துல சருமம் பளபளக்க இவற்றை உணவில் சேர்த்துகோங்க...

Jan 4, 2023
Maha Lakshmi S
குளிர்காலத்தின் குளிர்ந்த சூழல் மற்றும் வறண்ட காற்று சருமத்தின் ஈரப்பதத்தை பாதிக்கிறது. இதன் விளைவாக சரும வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படக்கூடும். இவற்றைத் தவிர்க்க உணவில் சில மாற்றங்களை செய்தால் போதும்.
பளபளப்பான சருமத்தைப் பெற உதவும் குளிர்கால உணவுகள்
கேரட்
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன. இது இளமையிலேயே ஏற்படும் சரும சுருக்கம் மற்றும் குளிர் கால சரும வறட்சியைக் குறைக்க உதவுகிறது
பாதாம்
பாதாமில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, பளபளப்பான தோற்றத்தை வழங்கிடும். இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது
அவகாடோ
அவகாடோவில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும சேதத்தை சரிசெய்து, புதுப்பிக்க உதவும்
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் சி சருமத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும். மேலும், சருமத்தில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி, சருமத்தை உள்ளிருந்து பளபளபாக்கும்
கீரை
கீரையில் உள்ள பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த சரும அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது
கொடுக்கப்பட்டுள்ள 5 உணவுகள் குளிர்காலம் முழுவதும் உங்கள் சருமத்தைப் பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். எனவே, அவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுளங்கள்