Tap to Read ➤

புரோட்டீன் அதிகம் நிறைந்த காய்கறிகள்!

மனித உடலுக்கு புரோட்டீன் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். உடலின் பெரும்பாலான செல்களில் புரோட்டீன் உள்ளது. இந்த புரோட்டீனைப் பெற சிறந்த வழி புரோட்டீன் உணவுகளை உண்பது தான்.
Maha Lakshmi S
புரோட்டீனானது சருமம், இரத்தம், எலும்புகள் மற்றும் தசை செல்களின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். புரோட்டின் இறைச்சிகளில் மட்டும் இல்லை. ஒருசில காய்கறிகளிலும் அதிகம் உள்ளது.
பசலைக்கீரையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. பச்சை இலைக் காய்கறிகளிலேயே மிகச்சிறந்தது என்றால் அது பசலைகீரை தான்.
ப்ராக்கோலியிலும் நல்ல அளவில் புரோட்டீன் உள்ளது. இந்த ப்ராக்கோலியை பலவாறு சாப்பிடலாம்.
சாலட்டுகளில் அதிகம் சேர்க்கும் முட்டைக்கோஸில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதுவும் 100 கிராம் முட்டைக்கோஸில் 1-2 கிராம் புரோட்டீன் உள்ளது.
காளானில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதோடு இது குளிர்ச்சியானது என்பதால் உடல் சூட்டைக் குறைக்கும்.
பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கிலும் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதோடு இது எளிதில் கிடைக்கக்கூடியதும் கூட.
பச்சை பட்டாணியில் புரோட்டீன் மட்டுமின்றி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளது.
சோயாபீன்ஸ் புரோட்டீனின் சிறந்த ஆதாரமாகும். அதுவும் பச்சை சோயாபீன்ஸ் புரோட்டீன் குறைபாட்டை எளிதில் செய்யும். இது தவிர, சோயா பால், டோஃபு, சோயா சாஸ் போன்றவற்றிலும் புரோட்டீன் உள்ளது.