Tap to Read ➤

சமந்தாவின் பிறந்த நாளான இன்று ட்ரெண்டிங்கில் சமந்தாவின் புகைப்படங்கள்

இன்று தனது 35வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நடிகை சமந்தா.
abinaya narayanan
மாடலிங்கில் பயணத்தைத் தொடங்கிய சமந்தாவிற்கு திரைத்துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தது
'மாஸ்கோவின் காவேரி' படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா, அதர்வாவின் பாணாகாத்தாடி படத்தின் மூலம் பிரபலமானார்
அடுத்து ஈ படத்தின் மூலம் முன்னணி நாயகிகளில் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சமந்தா.
தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நாயகர்களுடன் நாயகியாக நடித்துள்ளார் சமந்தா.
”நீ தானே என் பொன் வசந்தம்” படத்தின் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் பல விருதுகளைப் பெற்றார்
பின்னர் ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளார் .
புஷ்பா படத்தின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மூலம் இந்தியாவின் ஹிட் நடிகையாக வலம் வருகிறார்
சமந்தாவின் பிறந்தநாளான இன்று ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.