Tap to Read ➤

வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

நெய் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது. ஆயுர்வேதத்தின் படி, நெய் சிறுகுடலின் உறிஞ்சும் திறனை மேம்படுத்துவதோடு, இரைப்பையில் pH அளவைக் குறைக்கிறது.
Maha Lakshmi S
நெய்யை அன்றாட உணவில் சேர்ப்பதை விட, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் உட்கொண்டால் பல நன்மைகளைப் பெறலாம்.
காலையில் வெறும் வயிற்றில் நெய்யை சாப்பிடுவது செரிமான மண்டலத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
தினமும் நெய்யை காலையில் சாப்பிட்டால் சருமம் நன்கு சுத்தமாகவும், பொலிவாகவும் இருக்கும்.
நெய் சீரான மற்றும் சரியான குடலியக்கத்திற்கு உதவுகிறது.
வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது நீண்ட நேரம் பசியெடுக்காமல் பசியுணர்வைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நொதிகளை அதிகரிக்க உதவுகிறது.
முக்கியமாக, எலும்புகளின் வலிமை மற்றும் ஸ்டாமினாவை மேம்படுத்த உதவுகிறது.