Tap to Read ➤

இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் அற்புத பானங்கள்!

உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் முக்கிய பணியை இரத்தம் செய்கிறது. இந்த இரத்தத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அது முழு உடலையும் பாதிக்கும்.
Maha Lakshmi S
உண்ணும் உணவுகளால் இரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் தேங்கும். இரத்தத்தில் உள்ள இந்த நச்சுக்களை அகற்ற சில பானங்கள் உதவி புரியும்.
ஒரு டம்ளர் நீரில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.
தினமும் 8-10 துளசி இலைகளை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். இல்லாவிட்டால் நீரில் சிறிது துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்கலாம்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஒரு கப் நீரில் சிறிது இஞ்சியைத் துருவிப் போது, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து 5-6 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.
பசலைக்கீரை, பீட்ரூட், பூண்டு, இஞ்சி, ப்ராக்கோலி ஆகியவற்றை சிறிது எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் ஊற்றி அரைத்து, சிறிது ப்ளாக் சால்ட் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம்.