Tap to Read ➤

தினமும் சிறிது கறிவேப்பிலை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!

அன்றாட சமையலில் ஃப்ளேவருக்காக சேர்க்கும் பொருள் தான் கறிவேப்பிலை. ஆனால் இதை பலரும் தூக்கி எறிந்துவிடுவோம். கறிவேப்பிலையில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
Maha Lakshmi S
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, பி2, இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதை தினமும் சாப்பிட்டால் பெறும் நன்மைகள் இதோ!
கறிவேப்பிலை உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.
கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதால், சர்க்கரை நோயாளிகள் கறிவேப்பிலை சாப்பிடுவது மிகவும் நல்லது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இது கண்புரையைத் தடுப்பதோடு, பார்வை திறனை மேம்படுத்தும்.
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதால், இதை சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகையைத் தடுக்கலாம்.
கறிவேப்பிலை சாப்பிடுவதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, செரிமான மண்டலத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.
முக்கியமாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் தலைமுடியின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் மற்றும் நரைமுடி வருவது தடுக்கப்படும்.
கறிவேப்பிலையில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால், இது எலும்புகள் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.