காய்ச்சாத பச்சை பாலை முகத்தில் தடவுவதால் நடக்கும் அதிசயங்கள்!
Jan 2, 2023
Maha Lakshmi S
காய்ச்சாத பச்சை பாலில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவை சருமத்திற்கு சிறந்த பலனை அளிக்கக்கூடியவை.
பச்சை பாலை முகத்தில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
சருமத்தை வெண்மையாக்கும்
மன அழுத்தம், சூரிய ஒளி, அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றால் உண்டாகும் சரும கருமையை போக்க, பச்சைப் பாலை உபயோகிக்கலாம். இது சருமத்தை ஒளிரச் செய்து, இயற்கையான பொலிவைத் தரும்
எண்ணெய் பசை நீங்கும்
சருமத்தின் கூடுதல் எண்ணெய் பசையை போக்க, பச்சை பாலை மாய்ஸ்சரைசராக பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப்பதமாக்கி, அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிடும்
கரும்புள்ளி குறையும்
உங்கள் முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், தினமும் ஒரு காட்டன் உருண்டையில் பச்சை பாலை நனைத்து தடவவும். இதை தொடர்ந்து செய்தால், ஒரே வாரத்தில் வித்தியாசத்தை காணலாம்
வறட்சியைப் போக்கும்
காய்ச்சாத பச்சை பாலில் இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்கும் கொழுப்புகள் உள்ளன. இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருந்து, அதிக நேரம் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்
முகப்பரு மறையும்
பச்சை பாலில் உள்ள வைட்டமின் ஏ, முகப்பரு பிரச்சனையை போக்கும் பண்புகளைக் கொண்டது. மேலும், இதிலுள்ள லாக்டிக் அமிலம் முகப்பருவைக் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு தினமும் முயற்சிக்கவும்
வயதாவதை தடுக்கும்
உங்களுக்கு வயதானாலும், அது சருமத்தில் தெரியக்கூடாது என்றால், தினமும் பச்சை பாலை பயன்படுத்தி வாருங்கள். இது இளமை பொலிவை தருவதோடு, சரும கோடுகள், சுருக்கங்களைக் குறைத்திடும்
தினந்தோறும் உங்கள் முகத்தில் பச்சை பாலை தடவி, 2 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். இப்படி செய்வதன் பலனை இரண்டே வாரங்களில் தெளிவாக பார்க்க முடியும்