Tap to Read ➤

தினமும் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவுவதால் பெறும் நன்மைகள்!

கற்றாழை ஜெல் அதன் மருத்துவ குணத்தால் பல அழகு சாதனப் பொருட்களில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
Maha Lakshmi S
கற்றாழையில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம் உள்ளதால், இது சரும பிரச்சனைகளை திறம்பட போக்கக்கூடியது.
கற்றாழையின் ஜெல்லை தினமும் சருமத்தில் பயன்படுத்தி வந்தால், பல நன்மைகளைப் பெறலாம். இப்போது கற்றாழையின் அழகு நன்மைகளைக் காண்போம்.
கற்றாழை ஜெல் சருமத்தில் மாய்ஸ்சுரைசர் போன்று செயல்படும். ஆகவே இது சரும வறட்சியைப் போக்கும். அதோடு கற்றாழை சருமத்தை மென்மையாக்க உதவும்.
கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவுவதால், சூரியக் கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதங்கள் தடுக்கப்படும்.
கற்றாழையில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது விரைவில் சருமம் முதுமையடைவதை எதிர்த்துப் போராடும்.
கற்றாழையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வயது அதிகரிக்கும் போது சருமம் எலாஸ்டிக் போன்று விரிவடையும். இதனால் சருமத்தில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வருகின்றன. கற்றாழை ஜெல்லை தினமும் தடவி வந்தால், இதைக் குறைக்கலாம்.