Tap to Read ➤

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் டயட் ரகசியங்கள்!

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் ஆவார்.
Maha Lakshmi S
37 வயதாகியும் நடிகை நயன்தாரா இன்னும் ஃபிட்டாகவும், இளமையாகவும் காட்சியளிக்கிறார்.
நயன்தாரா ஃபிட்டாக இருப்பதற்கு பல்வேறு உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் மட்டுமின்றி, இவர் மேற்கொள்ளும் டயட்டும் ஓர் முக்கிய காரணம்.
நீங்கள் நயன்தாரா மேற்கொள்ளும் டயட்டை தெரிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள்.
நயன்தாரா அவரது ஃபிட்னஸ் ட்ரெயினரின் உதவியுடன், தனக்கான டயட் மற்றும் உணவுத் திட்டத்தை தயார் செய்து, தவறாமல் பின்பற்றி வருகிறார்.
நயன்தாரா இயற்கை உணவுகளை உண்பவர். இவரது டயட்டில் ஆரோக்கியமான, நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் அடங்கும்.
நயன்தாரா புரோட்டீன் அதிகம் நிறைந்த முட்டைகளையும், தோல் நீக்கப்பட்ட இறைச்சிகளையும் அதிகம் உண்பாராம்.
சர்க்கரை முதுமை செயல்முறையை வேகப்படுத்தும். எனவே இவர் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நிறைந்த எந்த உணவுகளையும் சாப்பிடமாட்டாராம்.
நயன்தாரா உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க போதுமான நீரை பருகுவாராம். அதற்கு இவர் நீரை தவிர, இளநீர், நற்பதமான பழச்சாறுகள், சூப் போன்றவற்றை எடுத்துக் கொள்வாராம்.