Tap to Read ➤

பாப் சிங்கர் ரிஹானாவின் வாய் பிளக்க வைக்கும் கர்ப்ப கால தோற்றங்கள்!

பாப் சிங்கர் ரிஹானா எப்போதும் விசித்திரமான உடைகளில் வந்து பலரை ஆச்சரியப்படுத்துவார். தற்போது கர்ப்பமாக உள்ள நிலையிலும் தனது ஸ்டைலை சற்றும் மாற்றாமல் இன்னும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் ரிஹானா.
Maha Lakshmi S
பாப் சிங்கர் ரிஹானா, அவரது பாய் பிரண்ட் ராக்கியுடன் 2020 ஆம் ஆண்டு முதலாக டேட்டிங்கில் உள்ளார்.
பாப் சிங்கர் ரிஹானா தனது முதல் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். தனது கர்ப்ப காலத்தை சந்தோஷமாக அனுபவித்து வருகிறார்.
சமீப காலமாக ரிஹானாவின் கர்ப்ப கால தோற்றங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
ரிஹானா தனது கர்ப்ப காலத்தில் கூட விசித்திரமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
சமீபத்தில் ரிஹானா பியூட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் சில்வர் நிற உடையில் வந்திருந்தார்.
ரிஹானா சில்வர் நிற உடைக்கு வயிற்றில் வைர செயினை அணிந்து வந்திருந்தார்.
இது ஃபென்டி பியூட்டி நிகழ்ச்சிக்கு ரிஹானா பச்சை நிற சீக்குவின் பேக்லெஸ் டாப் அணிந்து வந்த போது எடுத்தது.
இது பாரிஸ் ஃபேஷன் வீக்கின் போது ரிஹானா கருப்பு நிற 2 பீஸ் ஷீர் உடையை அணிந்து வந்த போது எடுத்தது.
இது 2022 ஆஸ்கருக்கு பின் நடந்த பார்ட்டிக்கு ரிஹானா மேற்கொண்டு வந்த ஸ்டைல்.