உங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!


பெரும்பாலானோருக்கு போதுமான அளவு புரோட்டீன் கிடைப்பதில்லை. புரோட்டீனானது உடலின் சீரான செயல்பாட்டிற்கு அத்தியாவசியமானது. இவை அமினோ அமிலங்களின் நீண்ட சங்கிலிகள். இது உடலின் பல்வேறு செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான மூலக்கூறுகளாகும். புரோட்டீன் நம் உடலில் ஒவ்வொரு செல்லின் ஒரு அங்கமாகும். உடல் இந்த புரோட்டீனை செல்களின் வளர்ச்சிக்கும், திசுக்களை சரிசெய்யவும், நொதிகள், ஹார்மோன்கள் மற்றும் உடலின் இதர கெமிக்கல்களை உருவாக்கவும், எலும்புகள், தசைகள், சருமம் மற்றும் இரத்தத்தின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புக்களைப் போன்று, நமது உடல் புரோட்டீனை சேமித்து வைப்பதில்லை. ஆகவே ஒருவர் அன்றாட உணவில் இருந்து தான் புரோட்டீனை பெற முடியும். இத்தகைய புரோட்டீன் பல்வேறு உணவுகளான இறைச்சி, பால், மீன், சோயா, முட்டை, பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ் வெண்ணெய் போன்றவற்றில் ஏராளமாக உள்ளது.

Have a great day!
Have a great day!