Latest Updates
-
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
ஆண்களே! படுக்கையில் நீங்க 'இப்படி' நடந்துக்கிட்டா...அது உங்க மனைவிக்கு சுத்தமா பிடிக்காதாம் தெரியுமா?
பெரும்பலான ஆண்களுக்கு பாலியல் வாழ்க்கை மிகவும் சவாலானாதாக இருக்கிறது. ஒரு ஆண் படுக்கையில் பாலியல் செயல்திறனை மேம்படுத்த தங்களால் இயன்றவரை முயற்சித்தாலும், சில சமயங்களில் அது தோல்வியில் முடிகிறது. அதற்கு அவர்களின் பழக்கவழக்கங்களும் காரணமாக இருக்கலாம்.
பெரும்பாலும் ஆண்கள் தங்களின் பாலியல் செயல்திறனை பற்றி கவலையாக இருக்கிறார்கள். உடலுறவில் எவ்வாறு செயல்படுவது? தங்கள் மனைவியை எவ்வாறு மகிழ்விப்பது? போன்ற விஷயங்களை பற்றிய புரிதல் இல்லாமல் உடலுறவு கொள்கிறார்கள். உடலுறவை பற்றி ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

அந்த வகையில், ஆண்களின் சில பழக்கவழக்கங்கள் உடலுறவில் செயல்படும் விதம் அவர்களின் மனைவிக்கு அதிருப்தி அளிக்கச் செய்கின்றன என்பதை அவர்கள் உணரத் தவறுகிறார்கள். சில ஆண்கள் படுக்கையில் மோசமாக இருப்பதற்கான காரணங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
அனுபவம் இல்லாமை
பெரும்பாலான ஆண்கள் உடலுறவுக்கு மிகவும் புதியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு சுத்தமாக அனுபவம் இல்லாமல் இருக்கலாம் அல்லது குறைந்த அனுபவத்தைக் கொண்டிருக்கலாம். தங்களது மனைவி அல்லது காதலியை உடலுறவில் திருப்திபடுத்துவதற்கும் மகிழ்விப்பதற்கும் தேவையான திறமைகள் அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம்.
மேலும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த ஆண்கள் சில சமயங்களில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவோ அல்லது உடலுறவில் சிறப்பாக செயல்படவோ எந்த விருப்பத்தையும் காட்ட மாட்டார்கள். விஷயங்களை கற்றுக்கொள்ளமால், தங்களை பற்றி தாழ்வாக உணர்ந்துகொண்டு, படுக்கையில் கவலையாக இருப்பார்கள்.
செயல்திறன் கவலை
செயல்திறன் கவலையால் பாதிக்கப்படும் ஆண்கள் உடலுறவின் போது விறைப்புத்தன்மையை பராமரிக்க போராடலாம். அவர்கள் முன்கூட்டியே விந்துவை வெளியேறலாம். இது ஆண்களை மிகவும் விரக்தியாகவும் அதிருப்தியாகவும் உணர வழிவகுக்கும். இதனால், ஆண்கள் படுக்கையில் அதிக நம்பிக்கையை கொண்டிருக்காமல், கவலையாக உணரலாம்.
சுயநலம்
சில ஆண்கள் தங்கள் மனைவியின் மகிழ்ச்சியை விட தங்கள் மகிழ்ச்சிக்கு அதிக முன்னுரிமை கொடுக்கலாம். இது அவர்களின் துணை உடலுறவின் போது ஒதுக்கப்பட்டதாக உணர வழிவகுக்கும். இதனால் அவர்களின் மனைவி வெறுப்பையும் கோபத்தையும் உணரலாம்.
மனைவியின் தேவையை விட தங்களின் தேவைகளுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதால் திருப்தியற்ற உடலுறவை ஆண்கள் பெறலாம். இதனால், அவர்களின் மனைவி இனி உடலுறவு கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.
முன்விளையாட்டு
உடலுறவின் போது முன்விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் அவசியம். பெண்களுக்கு இது மிகவும் பிடிக்கும். முத்தமிடுவதும், தொடுவதும், கட்டிப்பிடிப்பதும் உங்களுக்கு சிற்றின்பத்தை கொடுக்கும். உடலுறவில் தீவிரமாக செயல்படவும், உச்சக்கட்டம் அடையவும் ஃபோர்பிளே அவசியம்.
ஆனால் முன்விளையாட்டு இல்லாமல் உடலுறவுக்கு விரைந்து செல்லும் ஆண்கள், தங்கள் துணையின் அனுபவத்தை மகிழ்ச்சியை முற்றிலும் பாதிக்கிறார்கள். போர்பிளே இல்லாமல் பெண் முழுமையாக தூண்டப்படாமல் இருக்கலாம். இது திருப்தியற்ற உடலுறவுக்கு வழிவகுக்கும்.
மோசமான உடல் ஆரோக்கியம்
துர்நாற்றம் மற்றும் மோசமான உடல் சுகாதாரம் கொண்ட ஒரு ஆணுடன் படுக்கையில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள். மோசமான உடல் ஆரோக்கியம் பாலியல் செயல்திறனை பெருமளவு பாதிக்கும். சில ஆண்கள் தங்களை அழகுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை. சிறந்த பாலியல் அனுபவத்தைப் பெற தங்களை நன்றாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.



Click it and Unblock the Notifications

