Latest Updates
-
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல இந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
உங்க கணவன் அல்லது காதலன் அதிகமா ஆபாச படம் பாக்குறாங்களா? அப்ப இத நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்!
இன்றைய நாளில் எல்லாருடைய கைகளையும் ஆக்கிரமித்து இருக்கும் செல்போனில், எண்ணற்ற விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அதில் பாலியல் விஷயங்கள் சார்ந்த தகவல்களும், படங்களும் மற்றும் வீடியோக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில், பெரும்பாலான ஆண்கள் ஆபாச படங்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆண்கள் தங்கள் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல்வேறு கற்பனைகளில் ஈடுபடுகிறார்கள். இதற்காக அவர்கள் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்க்க விரும்புகிறார்கள். இது சில சமயங்களில் அவர்களுக்கு நன்மை அளிக்கலாம் மற்றும் பாதிப்பையும் ஏற்படுத்தலாம்.

பெண்களே! உங்கள் கணவன் அல்லது காதலன் ஆபாச படங்கள் பார்ப்பதை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நிஜ வாழ்க்கையில் உடலுறவு கொள்வதை விட, ஆபாச படம் பார்ப்பதில் இருந்து ஆண்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார்கள். இதற்கு சில காரணங்கள் உள்ளன. ஆபாசத்தைப் பார்க்கும் ஆண்களைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே காணலாம்.
பெண்களை பார்க்கும் விதம் மாறுபடும்
ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பார்க்கும்போது ஆண்கள் ஒருவித இன்பத்தை உணர்கிறார்கள். ஆபாச படங்களில் இருக்கும் உடலுறவுக்கும் நிஜத்தில் நடக்கும் உடலுறவுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஆபாச வீடியோக்களில் அழகாக அலங்கரிக்கப்பட்ட பெண்களின் படங்களையும் வீடியோக்களையும் பார்த்து, அதேபோல தங்கள் மனைவி அல்லது காதலி இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.
இதனால், அன்றாடம் பார்க்கும் அல்லது உடனிருக்கும் பெண்களின் யதார்த்தமான உடலமைப்பை வேறுமாதிரி உணர்கிறார்கள். யதார்த்தத்தை விட்டு, ஆண்கள் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையுடன் பெண்களைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இது ஆண்களின் யதார்த்தமற்ற எதிர்பார்ப்பை அதிகரிக்கும்.
உடலுறவு 'தேவை' என உணர்கிறார்கள்
ஆபாச படங்களை பார்க்கும்போது ஆண்களுக்கு செக்ஸ் 'தேவை' என்ற உணர்வு ஏற்படுகிறது. உடலுறவு வீடியோவை பார்ப்பதன் மூலம் திரும்ப திரும்ப அதை பார்க்க வேண்டும் என்று ஆண்களுக்கு தோன்றும். இங்கே பாலியல் தூண்டுதல் என்பது ஒரு போதைப்பொருளாக மாறுகிறது. இதனால், ஒவ்வொரு நாளும் ஆபாச படங்கள் மற்றும் வீடியோ பார்க்க அவர்கள் விரும்புகிறார்கள்.
ஆபாச உலகில் மூழ்கிவிடுகிறார்கள்
ஆண்கள் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்ப்பதால் பாலியல் ரீதியாக தூண்டப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் மனம் அதை பற்றியே நினைத்துக்கொண்டு இருக்கும். ஆபாச வீடியோவில் உள்ள உடலுறவு முறையை ஆண்கள் தங்கள் துணையுடன் தங்கள் சொந்த பாலியல் வாழ்க்கையில் முயற்சி செய்யலாம்.
அவர்களின் பாலியல் ஆசையின் பெரும்பகுதி ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்ப்பதிலிருந்து வருவதால், அவர்கள் தங்கள் துணையுடன் ஒரே மாதிரியான உடலுறவில் ஈடுபடுகிறார்கள். தங்கள் சொந்த முயற்சியின் மூலம் புதிதாக செயல்பட மாட்டார்கள். இது சலிப்பான பாலியல் வாழ்க்கையை ஏற்படுத்தும்.
நேராக சிந்திக்க முடியாது
ஆண்கள் வழக்கமான அடிப்படையில் அல்லது வழக்கத்தை விட சற்று அதிகமாக ஆபாச படங்களைப் பார்க்கும்போது, அவர்களின் மனம் ஆபாசத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கும். இது அவர்களின் வாழ்வில் அல்லது உறவில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இதனால், பல நேரங்களில் ஆண்களால் சரியாக சிந்திக்க முடியாமல் செயல்பட முடியாமல் போகலாம்.
தன்னடக்கத்தை இழக்கிறார்கள்
தொடர்ந்து ஆபாச படங்களைப் பார்க்கும் ஆண்களின் மூளை மெதுவாக மாறுகிறது. அவர்களால் அதிலிருந்து விடுபட முடியாத அளவிற்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஆபாச படத்தை தவறாமல் பார்ப்பது மூளையின் விருப்பத்தையும், நெறிமுறை முடிவெடுக்கும் ஆற்றலையும் பலவீனப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், ஆண்கள் மெல்ல மெல்ல தன்னடக்கத்தை இழந்து வேறுமாதிரி மாறுகிறார்கள்.
ஆதலால், பெண்களே! உங்க கணவன் அல்லது காதலன் அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பதாக உங்களுக்கு தெரிந்தால், அவர்களை கட்டுப்படுத்துங்கள். இது உங்களின் உறவுக்கும் பாலியல் வாழ்க்கைக்கும் நல்லது.



Click it and Unblock the Notifications


