உங்க ராசிப்படி எந்த ராசிக்காரங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்க வாழ்க்கை நரகமா மாறும் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் ஆளுமையைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் பிறந்த ராசியை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். பல நூற்றாண்டுகளாக மக்கள் இதை நம்புகிறார்கள். ஒருவரின் ராசியை வைத்து அவர்களின் ஆளுமை, குணநலன்கள் முதல் அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைதுணையாக இருப்பார்கள் என்பது வரை தெரிந்து கொள்ளலாம்.

சில ராசிகளில் பிறந்தவர்கள் தனியாக இருக்கும் போது சிறந்த வாழ்க்கைதுணையாக இருந்தாலும் குறிப்பிட்ட ராசியுடன் இணையும்போது மோசமான வாழ்க்கைத்துணையாக மாறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் ஜோடியாக இணையும்போது ஒருவருக்கொருவர் மோசமான குணங்களை வெளிப்படுத்த முடியும். எனவே, அவர்களின் திருமணமும், உறவுகளும் சிக்கல்கள் நிறைந்ததாக மாறும். இதனால் அவர்களின் உறவு விரைவில் முடிவுக்கு வரும். இந்த பதிவில் எந்தெந்த ராசிகாரர்கள் மோசமான தம்பதிகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Which Zodiac Signs Make the Worst Couples

மேஷம் மற்றும் கடகம்

ராசி சக்கரத்தின் முதல் ராசியான மேஷம் என்பது நெருப்பு ராசி, அதே சமயம் கடகம் என்பது நீர் ராசி, எனவே அவை ஒன்றோடொன்று பொருந்தாத ராசியாகும். நீர் ராசியாக இருப்பதால், கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள், அதே சமயம் மேஷ ராசியில் பிறந்தவர்கள் துடிப்பானவர்களாகவும் வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும் இருப்பார்கள். எனவே மேஷம் ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்களின் உணர்வுகளை தொடர்ச்சியாக புண்படுத்துவார்கள். இது அவர்களுக்கு இடையே நிறைய தவறான புரிதல்களையும் ஏற்படுத்தும்.

மீனம் மற்றும் தனுசு

மீனம் என்பது நீர் ராசி, தனுசு என்பது நெருப்பு ராசி. எனவே, இந்த ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் ஆளுமைகள் மற்றும் குணாதிசயங்களில் முற்றிலும் வேறுபட்டவராக இருப்பார்கள். தனுசு ராசிக்காரர்கள் வெளிப்படையாகப் பேசுபவர்கள், துடிப்பானவர்கள் மற்றும் சாகசக்காரர்கள், அதே சமயம் மீன ராசிக்காரர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படுபவர்கள், உணர்திறன் உடையவர்கள், பச்சாதாபம் கொண்டவர்கள். தனுசு ராசிக்காரர்களின் வெளிப்படையான பேச்சு இயல்பு மீனத்தை அறியாமலேயே காயப்படுத்தக்கூடும், இதனால் அவர்களின் திருமண வாழ்க்கை பல சிக்கல்களை சந்திக்கும்.

Which Zodiac Signs Make the Worst Couples

மிதுனம் மற்றும் விருச்சிகம்

மிதுன ராசிக்காரர்கள் இரட்டை ஆளுமைக் கொண்டவர்கள், விளையாட்டுத்தனமானவர்கள் மற்றும் லேசான மனம் படைத்தவர்கள், அதே சமயம் விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமானவர்கள் மற்றும் ஆழமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். உறவுகளில், விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் துணை மீது பொஸசிவாக வைத்திருப்பார்கள், அதே சமயம் மிதுன ராசிக்காரர்கள் தனித்துவமாக முன்னேற விரும்புபவர்கள்.

எனவே, மிதுன ராசிக்காரர்களுக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இடையிலான உறவு மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் கடினம். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும், அவர்களின் திருமணம் வெற்றிபெற அவர்களுக்கு நிறைய பொறுமை மற்றும் புரிதல் தேவைப்படும்.

மகரம் மற்றும் சிம்மம்

மகர ராசிக்காரர்கள் பூமி ராசிக்காரர்கள், அதே சமயம் சிம்மம் நெருப்பு ராசியை சேர்ந்தவர்கள். மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள், ஒழுக்கமானவர்கள் மற்றும் நிதானமானவர்கள் என்று அறியப்படுகிறார்கள். அதேசமயம், சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக சத்தமாகப் பேசுபவர்கள், நட்பானவர்கள், தற்பெருமை நிறைந்தவர்கள், மேலும் அவர்கள் எப்போதும் கவனத்தின் மையமாக இருக்க விரும்புகிறார்கள். அவர்களின் முரண்பாடான ஆளுமைகள் காரணமாக, அவர்களின் திருமண வாழ்க்கையை சவாலானதாக மாற்றும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion