Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்!
உங்க EX லவ்வருடன் தொடர்பில் இருக்கீங்களா? அப்ப அது எந்த கட்டத்துல தவறான தொடர்பாக மாறும் தெரியுமா?
பெரும்பலான மக்களுக்கு கடந்த காலத்தில் ஓர் உறவு கண்டிப்பாக இருந்திருக்கும். ஏதோ காரணம், பிரச்சனை அல்லது தவறினால் அந்த உறவு நீடிக்காமல், பிரிந்து இருக்கக்கூடும். அந்த பிரிவு உங்களுக்கு பெரும் வேதனையை தந்திருக்கலாம்.
காதல் பிரிவிலிருந்து நீங்கள் வெளியவர முயற்சி செய்ய வேண்டும். அதேபோல சில காலங்கள் கழித்து, நீங்களும் அந்த கவலையில் இருந்து வெளியேறிவிடுவீர்கள். இருப்பினும், அந்த காதல் உங்கள் மனதின்னுள்ளே அப்படியே இருக்கும். உங்கள் முன்னாள் காதலரை மீண்டும் எங்காவது பார்க்கும்போது, உங்கள் மனம் தடுமாறலாம்.

பிரிந்துபோன உறவை மீண்டும் கட்டமைக்க முயலலாம். ஆனால், நிகழ்காலத்தில் உங்களுக்கென்று ஓர் உறவு தனியாக இருக்கலாம். அந்த நேரத்தில் அவர்களுடன் பேசுவது எவ்வளவு தவறானது அல்லது சரியானது என்பதைத் தீர்மானிப்பது கடினம். அது மிகவும் சிக்கலானது மற்றும் அது எல்லையைத் தாண்டி ஏமாற்றுவதாகக் கணக்கிடப்படும்.
இது உரையாடலின் தன்மை, நோக்கங்கள் மற்றும் தற்போதைய உறவில் அமைக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் எல்லைகள் உட்பட பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. முன்னாள் காதலருடன் பேசுவது குறித்து உலகளவில் வரையறுக்கப்பட்ட எந்த கோடு எதுவும் இல்லை.
ஆனால், உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் பேசும்போது, தற்போதைய உறவில் இருக்கும் எல்லைகளை நீங்கள் மீறி செல்கிறீர்கள் என்பதை அறிவதற்கான அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், நீங்கள் துணைக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
எல்லைகளை புறக்கணித்தல்
உங்கள் முன்னாள் காதலனை அல்லது காதலியை காணும்போது, எல்லாருக்கும் வருத்தம் மற்றும் கவலை இருக்கும். பழைய நினைவுகள் மீண்டும் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். மீண்டும் அந்த உறவு இணைந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க தோன்றலாம். ஆனால், நிகழ்காலத்தில் அவர்கள் உங்களுக்கு முன்னாள் காதலர் மட்டுமே என்பதை நன்றாக மனதில் பதிய வைக்க வேண்டும்.
உங்கள் முன்னாள் காதலருடன் தொடர்பில் இருக்க நேர்ந்தால், உங்களுக்குள் அல்லது உங்கள் தனிப்பட்ட உறவுக்குள் சில எல்லைகளை அமைக்க முயல்வீர்கள். ஆனால், தெரிந்தே அந்த எல்லைகள் மீறப்பட்டால், அது நம்பிக்கைத் துரோகமாகும்.
உணர்ச்சி நெருக்கம்
ஒரு முன்னாள் காதலன் அல்லது காதலியுடன் இருக்கும் உரையாடல்கள் உணர்ச்சி ரீதியாக நெருக்கமானதாக மாறினால், அது உங்கள் துணைக்கு செய்யக்கூடிய துரோகமாகும். தனிப்பட்ட உணர்வுகள், ஆசைகள் அல்லது ஒப்புதல் வாக்குமூலங்கள் ஆகியவை உங்கள் துணையுடன் பொதுவாக இருந்தால், அது உணர்ச்சி துரோகத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
இரகசியம் மற்றும் ஏமாற்றுதல்
நீங்கள் இப்போது ஓர் உறவில் இருக்கிறீர்கள் என்றால், அந்த உறவிற்கு உண்மையாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் ஓர் உறவில் இருந்துகொண்டு, உங்கள் முன்னாள் காதலருடனும் தொடர்பில் இருக்க விரும்புகிறீர்கள் எனில், அது நல்லதல்ல.
உங்கள் முன்னாள் நபருடன் தொடர்பில் இருப்பதை உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் மறைக்க அல்லது பொய் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அது நம்பிக்கை மீறலின் தெளிவான அறிகுறியாகும். ஆரோக்கியமான உறவில் திறந்த மற்றும் நேர்மையான தொடர்பு மிக அவசியம். உங்கள் முன்னாள் காதலன் மற்றும் காதலியை பற்றி இரகசியம் காப்பது நல்லதல்ல.
தற்போதைய உறவைப் புறக்கணித்தல்
முன்னாள் காதலருடன் தொடர்பில் இருக்க விரும்பி, தற்போதைய உறவை நீங்கள் புறக்கணிக்க தொடங்கலாம். தற்போதைய உறவில் நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்வதை விட முன்னாள் நபருடன் பேசுவது ஒரு முன்னுரிமையாக மாறும் போது, அது உணர்ச்சிப் பற்றின்மையைக் குறிக்கிறது. இது உங்களுடைய தற்போதைய உறவில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
காதலை மீண்டும் தூண்டும் நோக்கங்கள்
முன்னாள் காதலர் ஒருவருடனான உரையாடல்களில் ஊர்சுற்றல், காதல் முன்னேற்றங்கள் அல்லது காதல் உறவை மீண்டும் புதுப்பிக்க விருப்பம் உங்களுக்கு இருந்தால், அது ஒரு வகையான ஏமாற்று வடிவமாகவே பார்க்கப்படும்.
இது தற்போதைய கூட்டாளருக்கான அர்ப்பணிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும் நீங்கள் தொழில்நுட்ப ரீதியாக தற்போது இருக்கும் நபரை நீங்கள் மதிக்கவில்லை மற்றும் அவர்கள் மீது அக்கறை காட்டவில்லை என்பதை குறிக்கிறது.



Click it and Unblock the Notifications
