Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
இந்த அறிகுறிகள் மட்டும் உங்ககிட்ட இருந்தா? நீங்க பயங்கரமான செக்ஸ் அடிக்ட்-டா இருப்பீங்களாம் தெரியுமா?
இன்றைய நாளில் பெரும்பாலன மக்கள் பல்வேறு விஷயங்களுக்கு அடிக்ட் ஆதாவது அடிமையாகி இருக்கிறார்கள். அந்த வகையில் செக்ஸுக்கு அடிக்ட்-ஆனா நபர்களும் அதிகளவில் உள்ளனர். பாலியல் அடிமையாதல், உங்களை பல்வேறு வழிகளில் பாதிக்கலாம்.

ஒவ்வொரு நபருக்கும் மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கை என்பது இன்றியமையாததுதான். இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. உங்கள் பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க நீங்கள் பல்வேறு விஷயங்களை செய்யலாம். இது பொதுவானது. மகிழ்ச்சியான பாலியல் வாழ்க்கையை பெற முயற்சிப்பதும் செக்ஸ் அடிக்ட்-டும் வேறுவேறு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
பாலியல் அடிமையாதல் என்பது தனிப்பட்ட, சமூக அல்லது தொழில் சார்ந்து திறம்பட செயல்படும் தனிநபரின் திறனை முற்றிலும் பாதிக்கும். இது அவர்களின் உறவுகளிலும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம். பாலியல் கற்பனைகள், தூண்டுதல்கள் அல்லது நடத்தை ஆகியவற்றின் தொடர்ச்சியான வடிவத்தை நீங்கள் பெற துடிக்கும் மனநிலை ஆகும்.
நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதைக் குறிக்கும் அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
கட்டுப்படுத்த முடியாத பாலியல் தூண்டுதல்கள்
உடலுறவில் திருப்தியாக செயல்பட பாலியல் தூண்டுதல் மிக அவசியம். ஆனால், பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான கட்டுப்பாடற்ற தூண்டுதல் உங்களுக்கு இருந்தால், நீங்கள் செக்ஸ் அடிக்ட் நபராக இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் செக்ஸ் பற்றி அதிகமாக சிந்திக்கவும், ஆபாச திரைப்படங்களைப் பார்க்கவும் அல்லது பாலியல் சந்திப்புகளைத் தேடவும் நிறைய நேரம் செலவிடுகிறீர்கள் எனில், நீங்கள் பாலியல் அடிமையாக இருக்கலாம்.
ஆபத்தான பாலியல் நடத்தையில் ஈடுபடுதல்
பாலியல் அடிமையாதலின் மற்றொரு அறிகுறி, பல கூட்டாளிகளுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்வது ஆகும். பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும்போது, உங்கள் உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் பாதிக்கும் நோய்தொற்றுக்கள் பரவ அதிக வாய்ப்புள்ளது.
விவகாரமான பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்ற ஆபத்தான பாலியல் நடத்தையில் தொடர்ந்து ஈடுபடுவதும் செக்ஸ் அடிக்ட் ஆகும். இந்த நபர்கள் உடலுறவில் உள்ள சாத்தியமான அபாயங்களைப் பற்றி அறிந்திருக்கலாம். இருப்பினும், இவர்களால் உடலுறவில் ஈடுபடுவதைத் தடுக்க முடியாது.
பாலியல் நடத்தைகளை கட்டுப்படுத்துவதில் சிரமம்
உடலுறவுக்கு அடிமையாக இருக்கும் ஒரு நபரின், அவர்களின் தனிப்பட்ட, சமூக அல்லது தொழில் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் பல ஏற்படக்கூடும். இருப்பினும், இது எதுவும் அவர்களின் பாலியல் நடத்தையைக் கட்டுப்படுத்தாது.
தவறான அல்லது பொது அமைப்புகளில் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, பாலியல் நடவடிக்கைகளில் அதிகளவு பணத்தை செலவழிப்பது மற்றும் பாலியல் நடத்தையில் ஈடுபடுவதற்கான பிற பொறுப்புகளை புறக்கணிப்பது ஆகியவை இதில் அடங்கும்.
வாழ்க்கையின் மற்ற அம்சங்களைப் புறக்கணித்தல்
பாலியல் அடிமைத்தனம், வேலை, உறவுகள் மற்றும் பொழுதுபோக்குகள் போன்ற வாழ்க்கையின் பிற அம்சங்களை புறக்கணிக்க வழிவகுக்கும். ஒரு நபர் மற்ற பொறுப்புகளை விட பாலியல் செயல்பாடுகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கலாம். இது அவர்களின் வேலையை இழப்பது அல்லது அன்புக்குரியவர்களுடனான உறவுகளை பாதிப்பது போன்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
எதிர்மறை உணர்ச்சி விளைவுகள்
பாலியல் அடிமைத்தனம் அவமானம், குற்ற உணர்வு அல்லது குறைந்த சுயமரியாதை போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளை உங்களுக்குள் ஏற்படுத்தலாம். உடலுறவுக்கு அடிமையாக இருக்கும் நபர்கள் சில நேரங்களில் தங்கள் நடத்தையில் கட்டுப்பாட்டை இழந்து வெட்கப்படக்கூடும். இது அதிகரித்த கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மற்றும் குறிப்பிடத்தக்க மனக் கவலையை ஏற்படுத்தினால், பாலியல் அடிமைத்தனத்திற்கு சிகிச்சையளிக்கும் மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறுவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.



Click it and Unblock the Notifications


