Latest Updates
-
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
கள்ளக்காதலில் மொத்தம் 7 வகைகள் உள்ளதாம்? இதுவரை நீங்கள் அறியாத உளவியல் ரகசியங்கள்...!
திருமண அல்லது காதல் உறவுகளுக்கு வெளியே வேறொருவருடன் உணர்ச்சிரீதியான அல்லது உடல்ரீதியான நெருக்கத்தில் இருப்பது தகாத உறவு அல்லது கள்ள உறவு என்று அழைக்கப்படுகிறது.
இது பொதுவாக துரோகம் அல்லது வஞ்சகம் பற்றியது. ஆனால் இந்த உறவுகளிலேயே பல வகைகள் உள்ளன மற்றும் அவை வெவ்வேறு விதங்களில் உணர்ச்சிகரமான ஈடுபாட்டைக் கொண்டிருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்குத் தெரியாத ஏழு வகையான கள்ள உறவுகள் என்ன அவற்றின் தன்மை எப்படிப்பட்டது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உணர்வுப்பூர்வமான உறவு
உறவில் இருக்கும் ஒருவர் உறவுக்கு வெளியே உள்ள வேறொருவருடன் ஆழ்ந்த உணர்ச்சிரீதியான தொடர்பை வளர்த்துக் கொள்வது உணர்ச்சிபூர்வமான தகாத உறவு என்று அழைக்கப்படுகிறது. தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது, ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைப்பது, ஆறுதல் மற்றும் ஆதரவைத் தேடுவது ஆகியவை இதில் அடங்கும்.
பாலியல்ரீதியான தகாத உறவு
பாலியல்ரீதியான கள்ள உறவு தங்கள் உறவுக்கு வெளியே உள்ள ஒருவருடன் உடல் நெருக்கத்தை உள்ளடக்கியது. இதில் ஒன் நைட் ஸ்டாண்டு அல்லது தொடர்ச்சியான பாலியல் உறவுகள் இருக்கலாம்.
சைபர் தகாத உறவு
சைபர் கள்ள உறவு என்பது ஆன்லைனில் நடக்கும் ஒருவகை திருமணம் தாண்டிய உறவாகும். குறுஞ்செய்திகள், சமூக ஊடகங்கள் அல்லது டேட்டிங் ஆப்கள் மூலம் யாரோ ஒருவருடன் ஆபாசமாக பேசுவது, உடலுறவில் ஈடுபடுவது மற்றும் பாலியல் உரையாடல்களை மேற்கொள்வது ஆகியவை இதில் அடங்கும்.
பழிவாங்கும் தகாத உறவு
பழிவாங்கும் கள்ள உறவு என்பது தம்பதிகளில் ஒருவர் ஏமாற்றப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக ஏமாற்றுவது அல்லது உறவில் தவறாக நடத்தப்பட்டதற்காக தங்கள் துணை தவிர்த்து வேறொருவருடன் உறவை வளர்த்துக் கொள்வது.
தொடர்ச்சியான கள்ள உறவு
ஒரு தொடர் கள்ள உறவு என்பது ஒருவர் மீண்டும் மீண்டும் தகாத உறவில் ஈடுபடுவது, பெரும்பாலும் இந்த வகை கள்ள உறவு பல துணைகளை உள்ளடக்கியது. இது ஒரு ஆழமான உளவியல் பிரச்சினை அல்லது எந்த ஒரு உறவிலும் அர்ப்பணிப்பு இல்லாததைக் குறிக்கலாம்.
மிட்லைஃப் கள்ள உறவு
ஒரு மிட்லைஃப் கள்ள உறவு என்பது ஒருவர் தங்கள் வாழ்க்கையில் தாங்கள் செய்த தேர்வுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அவர்களின் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க அல்லது இளமையாக உணர்வதற்கு தகாத உறவில் ஈடுபடுவது.
சந்தர்ப்பவாத கள்ள உறவு
ஒரு சந்தர்ப்பவாத கள்ள உறவு என்பது தம்பதிகளில் ஒருவர் ஒரு சூழ்நிலையைப் பயன்படுத்தி தற்காலிகமாக கள்ள உறவில் ஈடுபடுவது. தம்பதிகளில் ஒருவர், வேலைக்காக பயணம் செய்யும் போது, விவாகரத்து செய்யும்போது அல்லது தற்காலிக பிரிவைக் கையாளும் போது இது நிகழலாம்.



Click it and Unblock the Notifications


