Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
ஆண்களே! இந்த மாதிரியெல்லாம் செஞ்சா.. பெண்களை ஈஸியா மடக்கிடலாமாம்... ட்ரை பண்ணுங்க..
பெண்களை இம்ப்ரஸ் பண்ணுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. பெண்களுக்கு மிகவும் ரொமான்டிக் ஆன ஆண்கள் என்றால் மிகவும் பிடிக்கும். தன்னுடைய காதலன் அல்லது கணவன் தன்னிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என்றே அவர்கள் நினைப்பார்கள்.
காதலை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல சின்ன சின்ன விஷயங்களாலும் வெளிப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் விருப்பங்களாக இருக்கும். முத்தம் கொடுப்பதாக இருக்கட்டும், கட்டியணைப்பதாக இருக்கட்டும் இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களை பெண்கள் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் பெண்களுக்கு பிடித்த சில ரொமான்டிக் ஆன விஷயங்களை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

மெதுவாக முத்தமிடுதல்
பெண்களுக்கு மென்மை தான் அதிகமாக பிடிக்கும். மெதுவாக முத்தமிடும் போது உணர்வுப் பூர்வமான ஒரு நெருக்கத்தை நீங்கள் உணரலாம். எனவே உங்கள் காதலியை நீங்கள் மெதுவாக முத்தமிடும் போது அவர்கள் மிகவும் ரொமான்டிக் ஆக உணருவார்கள். இது அவர்களை மிகவும் ஸ்பெஷலாக உணரச் செய்யும்.
இருட்டான அறையில் ஒரு இறுக்கமான அணைப்பு
பெண்களுக்கு பின்னாடி இருந்து கட்டியணைப்பது மிகவும் பிடிக்கும். பெண்களுக்கு பின்னாடி இருந்து கட்டியணைத்து கழுத்தில் முத்தமிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எனவே உங்கள் காதலியை நீங்கள் பின்னாடி இருந்து அணைக்க மறக்காதீர்கள். இருட்டான இடத்தில் கட்டியணைப்பது அவர்களுக்கு பிடித்தமான ஒன்று.
சூரியன் அஸ்தமன தருணத்தில் கன்னத்தில் முத்தமிடுங்கள்
சூரியன் அஸ்தமன தருணத்தில் பின்னால் இருந்து அணைத்து அவரது கன்னத்தில் முத்தமிடலாம். இருவரும் அப்படியே அமர்ந்து எதையாவது பேசிக் கொண்டு இருங்கள். இந்த மாதிரியான அழகிய தருணங்கள் உங்கள் காதலை மேலும் அழகாக்கும்.
உதட்டில் ஆழமாக முத்தமிட்டு காதலை சொல்லுதல்
உங்கள் காதலியிடம் நீங்கள் காதலைச் சொல்லப் போகிறீர்கள் என்றால் உதட்டில் ஆழமாக முத்தமிட்டு உங்கள் காதலைச் சொல்லலாம். இந்த மாதிரியான ரொமான்டிக் தருணங்கள் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
நடனம் ஆடும் போது மெதுவாக கழுத்தில் முத்தமிடுதல்
உங்கள் காதலியுடன் நீங்கள் எதாவது நடன அல்லது பார்ட்டிக்கு சென்றால் அவளுடன் நடனம் ஆடும் போது ஆடிக் கொண்டே அவரது கழுத்தில் மெதுவாக முத்தமிடலாம். இனிமையான இசையுடன் உங்கள் காதலை வெளிப்படுத்துவது என்றும் அழகாக இருக்கும்.
தலைமுடியை வருடி விடுதல்
உங்கள் காதலியுடன் படுத்து உறங்கும் போது உங்கள் கைகளில் அவளை தூங்க வைத்து அவளது தலைமுடியை நீங்கள் வருடி விடலாம். கூந்தலை வருடி விடுவது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். உங்களை ரொமான்டிக் ஆன ஆள் என்றும் அவர்கள் நினைப்பார்கள்.
இருவரும் ஒன்றாக ஓடி விட்டு முத்தம் கொடுங்கள்
இருவரும் ஒன்றாக மூச்சு இரைக்க ஓடி சோர்ந்து அப்பொழுது முத்தம் கொடுங்கள். இது உங்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். இருவரும் மிகவும் ரொமான்டிக் ஆக உணர்வீர்கள்.
உங்கள் காரின் மேல் உட்கார்ந்து இரவில் நட்சத்திரங்களை ரசியுங்கள்
பெண்களுக்கு இயற்கை மீது எப்பொழுதுமே ஓர் ஆர்வம் இருக்கும். முடிந்தால் உங்கள் இரவு பயணத்தின் மீது காரின் மேல் உட்கார்ந்து இரவில் வானில் இருக்கும் நட்சத்திரங்களை ரசியுங்கள். இதனிடையே உங்கள் ரொமான்டிக் ஆன காதலையும் வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கவிதை சொல்லுங்கள்
உங்கள் காதலை ஒரு கவிதை தொகுப்பாக எழுதி அவளுக்கு நீங்கள் பரிசளிக்கலாம். அவள் உங்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை இதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தலாம்.
காதலிக்கு பிடித்த உணவை சமைத்து கொடுங்கள்
உங்கள் காதலிக்கு பிடித்த உணவை நீங்கள் சமைத்து கொடுக்கலாம். அவளை உட்கார வைத்து நீங்கள் பரிமாறும் போது அவர்கள் மிகவும் ரொமான்டிக் ஆக உணருவார்கள்.
அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பு முத்தம் கொடுங்கள்
உங்கள் காதலி அல்லது மனைவிக்கு நீங்கள் ஆபிஸிற்கு செல்வதற்கு முன்பு முத்தம் கொடுக்கலாம். இதுவும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் மிகவும் ரொமான்டிக் ஆக உணருவார்கள்.
சிரிக்க வையுங்கள்
பெண்களுக்கு சிரிக்க வைக்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும். எனவே உங்கள் காதலியை அவ்வப்போது ஜோக் சொல்லி சிரிக்க வையுங்கள். இதனால் அவர்கள் மிகவும் சந்தோஷமாக உணருவார்கள்.
கைகோர்த்துக் கொண்டு நடத்தல்
உங்கள் காதலியுடன் முடிந்தால் கடற்கரையில் அல்லது மாலைப் பொழுதில் ஒரு நடைபயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். இருவரும் கைகோர்த்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு செல்லுங்கள். இது உங்கள் காதலை மேலும் அழகாக்கும்.



Click it and Unblock the Notifications