Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
உங்க செக்ஸ் வாழ்க்கை போரா போகுதா? அப்ப உடலுறவில் 'இந்த' விஷயங்கள ட்ரை பண்ணுங்க... சூப்பரா மாறுமாம்!
செக்ஸ் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் வரும் ஓர் அற்புதமான நிகழ்வு மற்றும் இன்ப உணர்வு. திருமணமான புதிதில் பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் காலங்கள் செல்ல செல்ல உடலுறவு சலிப்பானதாக மாறிவிடும். இது தம்பதிகளிடையே உள்ள நெருக்கத்தை குறைத்துவிடும்.
இன்று பெரும்பலான தம்பதிகள் சந்திக்கும் ஓர் முக்கிய பிரச்சனை திருப்தியற்ற பாலியல் வாழ்கை. ஒவ்வொரு தம்பதியினரும் தங்கள் பாலியல் வாழ்க்கையை எப்போதும் மசாலாவாக்க சில விஷயங்களை முயற்சி செய்ய வேண்டும். உங்கள் பாலியல் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்ற பல்வேறு வழிகள் உள்ளன.

உறவில், மகிழ்ச்சியாக இருக்க தம்பதிகள் இருவரும் இணைந்து விஷயங்களை முயற்சிக்க வேண்டும். உங்கள் பாலியல் வாழ்க்கையை எவ்வாறு சுவாரஸ்யமாக மாற்றலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
விருப்பங்களை அறிந்துகொள்வது
படுக்கையறையில் உங்கள் துணையின் விருப்பு வெறுப்புகளை நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம், உங்கள் பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். தம்பதிகள் உடலுறவில் என்ன விரும்புகிறீர்கள்? என்னென்ன நிலைகள் முயற்சிக்கலாம்? என்பதை பற்றி தம்பதிகள் இருவரும் பேசிப் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் விருப்பங்களை உங்கள் துணையுடன் பகிர்ந்துகொள்வது அவசியம். பாலியல் அனுபவத்தை இன்னும் சிறப்பாகச் செய்ய உங்கள் துணையோடு, சில்மிஷ விஷயங்களிலும் ஈடுபட வேண்டும். ஒருவரின் தேவையை மற்றொருவர் பூர்த்தி செய்யும்போது, அது சுவாரஸ்யமான உடலுறவாக மாறும்.
போர்ஃப்ளே
தம்பதிகள் இருவரும் உச்சக்கட்டம் அடைய உதவும் சிறந்த வழிகளில் போர்ஃப்ளேவும் ஒன்று. உங்கள் பாலியல் வாழ்க்கையை மசாலாவாக்கவும், சுவாரஸ்யமாக்கவும் முன்விளையாட்டை தம்பதிகள் முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் உறவில் ஈர்ப்பை அதிகரிக்க இது எவ்வளவு அழகாக செயல்படுகிறது என்பதை காலப்போக்கில் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஆதலால், ஒவ்வொரு தம்பதிகளும் போர்ஃபிளேவில் கட்டாயம் ஈடுபட வேண்டும்.
புதுமையான நிலை
எப்போதும் படுக்கையறையில் மட்டுமே செயல்படாதீர்கள். உங்கள் படுக்கையறையை விட்டு வெளியேறி, வீட்டில் சில சுவாரஸ்யமான இடங்களையும் தேர்வு செய்யுங்கள். டேபிள், சமையலறை, வாஷிங் மிஷின் இருந்தால் அங்கு என வீட்டில் பல புதுமையான நிலையை முயற்சி செய்யுங்கள். புதுமையான நிலையை புதிய இடங்களில் முயற்சிக்கும்போது, அது சுவாரஸ்யமானதாக இருக்கும்.
பாலியல் ஆசை குறித்த உரையாடல்
ஆரோக்கியமான உரையாடல் ஒவ்வொரு உறவுக்கும் மிக அவசியம். அந்த வகையில், தம்பதிகள் தங்கள் பாலியல் ஆசைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து உரையாட வேண்டும். இதன் மூலம் நீங்கள் இழந்த பாலியல் இன்பத்தை மீண்டும் அனுபவிக்க முடியும். சலிப்பான பாலியல் வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்று இருவரும் பேசுவது நல்லது.
ரோல் பிளேயிங்
ஒரே வழக்கமான உடலுறவிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபடுவது, தம்பதிகளுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். அதனால், புதியவற்றை முயற்சி செய்யுங்கள். அந்த வகையில், ரோல்-பிளேயின் பிரபலமான நுட்பத்தை நீங்கள் முயற்சிக்கலாம்.
உடலுறவில் ரோல்பிளேயிங் செய்வதன் மூலம் அதை சுவாரஸ்யமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் நீங்கள் மாற்றலாம். இங்கு விரும்பும் எதையும் நீங்கள் உங்கள் துணையிடம் செய்யலாம். இது உங்கள் உறவை வலுவாக பிணைக்க உதவும்.
திருப்தி தரும் பாலியல் நிலைகள்
உடலுறவு கொள்ளும் இடத்தை மட்டும் மாற்றாமல் புதிய புதிய பாலியல் நிலைகளையும் முயற்சி செய்து இன்பத்தை முற்றிலுமாக பெறுங்கள். புதிது புதிதாக நீங்கள் பாலியல் நிலையை முயற்சிக்கும்போது உங்கள் பாலியல் வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக மாற்றும்.
தம்பதிகள் இருவரும் முன்கூட்டியே பாலியல் நிலைகளை பற்றி பேசிக்கொள்ளுங்கள். உடலுறவில் உச்சகட்டம் அடைவதற்கு விதவிதமான பாலியல் நிலைகளை முயற்சி செய்யுங்கள். இது உங்கள் பாலியல் வாழ்க்கையை மட்டுமல்லாது உறவையும் வலுபெற செய்யும்.



Click it and Unblock the Notifications
