Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தம்பதிகளே! இந்த 4 அறிகுறிகள் மட்டும் உங்க உறவில் இருந்தா? சீக்கிரமா விவாகரத்து ஆக வாய்பிருக்காம்...உஷார்!
Signs of Divorce In Tamil: இன்றைய நாளில் விவாகரத்து செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு உறவு நீண்ட காலம் மகிழ்ச்சியாகவும் காதலுடன் செல்ல பல விஷயங்கள், குறிப்பாக சில விஷயங்கள் தேவைப்படுகின்றன.
காதல், நம்பிக்கை, விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் மரியாதை போன்ற விஷயங்கள் உறவில் இல்லையென்றால், அந்த உறவு நீண்ட காலம் நீடிக்காது. தம்பதிகளுக்குள் பல முறை சண்டை, வாக்குவாதங்கள் மற்றும் விவாதங்கள் வரலாம். இது பொதுவானது. ஆனால், அவற்றை நாம் ஆரோக்கியமான வழிகளில் கையாளுகிறோமா? என்பதுதான் முக்கியம்.

ஒரு உறவில் மகிழ்ச்சியாக இருக்க தம்பதிகள் இருவரின் பங்கும் மிக அவசியம். அதில், ஒருவர் சரியில்லை என்றாலும், உறவு நிலைப்பது கடினம். உங்கள் உறவு விவாகரத்தை நோக்கிச் செல்கிறது என்பதைக் குறிக்கும் பல அறிகுறிகள் உள்ளன. ஆனால், உங்கள் திருமண உறவு வாழ்க்கை முடிவடையப் போகிறது என்று கூறுவதில் 90% துல்லியத்தை உறுதிப்படுத்தும் 4 அறிகுறிகள் உள்ளன.
உங்கள் உறவில் இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க, ஆராய்ச்சி என்ன சொல்கிறது என்பதை தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள். ஆராய்ச்சியின்படி, விவாகரத்தை முன்னறிவிக்கும் நான்கு உறுதியான அறிகுறிகள் என்னென்ன என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மோசமான விமர்சனம்
தம்பதிகளுக்குள் ஆரோக்கியமான விமர்சனம் இருப்பது அவசியம். இது உறவை வலுப்படுத்தவும் நெருக்கத்தை அதிகரிக்கவும் உதவும். ஆனால், அதுவே மோசமான விமர்சனம் தம்பதிகளிடையே மன கசப்பை உண்டாக்கும். உறவில் விரிசலை ஏற்படுத்தி பிரிவுக்கு வழிவகுக்கும். குறிப்பிட்ட நடத்தைகள் அல்லது செயல்களுக்குப் பதிலாக பங்குதாரரின் தன்மை அல்லது ஆளுமையைத் தாக்கி பேசுவது இதில் அடங்கும்.
மோசமான விமர்சனங்கள் கூட்டாளர்களுக்கு இடையே உள்ள உணர்ச்சித் தொடர்பை சிதைத்து விவாகரத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஆராய்ச்சியின் படி, நீங்கள் 'ஒருபோதும்' மற்றும் 'எப்போதும்' என்ற சொற்களைப் பயன்படுத்தும்போது, கையில் இருக்கும் பிரச்சினையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் உங்கள் துணையின் குணாதிசயத்தை மதிப்பிடுகிறீர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கிறீர்கள். இது உங்கள் துணையை மிகவும் காயப்படுத்தும்.
தற்காப்பு
தற்காப்பு என்பது தங்களை மற்றவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்வது. உறவில் தற்காப்பு என்பது சண்டை அல்லது விவாதத்தின்போது, மறுப்பது அல்லது எதிர் தாக்குதல்களுடன் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் போக்கைக் குறிப்பதாகும். தம்பதிகள் ஒருவரையொருவர் தற்காத்துக் கொள்ளும்போது, அது மோதல்களை அதிகரித்து உறவு முறிவுக்கு வழிவகுக்கும். உறவை பாதுகாக்காமல், நீங்கள் இருவரும் தனித்தனியாக பாதுகாத்து கொள்வது ஆரோக்கியமான உறவுக்கு நல்லதல்ல.
நீங்கள் தற்காத்துக் கொள்ளும்போது, நிறைய சாக்குப்போக்குகளைச் சொல்வீர்கள் மற்றும் உங்கள் துணையின் மீது எளிதாக பழி கூறுவீர்கள். மேலும் உங்கள் செயல்களை நீங்கள் சொந்தமாக வைத்திருக்க மாட்டீர்கள். உங்கள் துணை கூறும் புகார்களில் உங்கள் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது மிகவும் முக்கியம்.
ஸ்டோன்வாலிங்
ஸ்டோன்வாலிங் என்பது தகவல்தொடர்புகளில் இருந்து விலகுவது அல்லது மோதல்களின் போது உணர்வுபூர்வமாக இருக்க தவிர்ப்பது. ஸ்டோன்வாலிங் கூட்டாளர்களுக்கு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சிரமத்தை ஏற்படுத்தலாம். விவகாரத்தை நோக்கி செல்லும் ஆபத்தை அதிகரிக்கலாம்.
பல தம்பதிகள் அமைதியை கடைப்பிடிப்பதில் தவறு செய்கிறார்கள். எல்லா இடங்களிலும் அமைதியாக இருப்பது நல்லதல்ல. நாம் பேச வேண்டிய இடத்தில் மெளனத்தை களைத்து பேச வேண்டியதை பேச வேண்டும். இல்லையெனில், அது உங்கள் உறவையே முற்றிலும் பாதிக்கும். இரு கூட்டாளிகளும் உறவில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உறவை மகிழ்ச்சியாக வைத்திருக்க கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.
அவமதிப்பு
ஒவ்வொருவருக்கும் மரியாதை மற்றும் சுயமரியாதை மிக முக்கியம். உறவில் மரியாதையை இல்லாமல் நடந்துகொள்வது மன கசப்புக்கு வழிவகுக்கும். பெருமூச்சு விடுதல், உங்கள் கண்களை உருட்டுதல், உங்கள் துணையை கேலி செய்தல், மற்றவர் முன்பு கிண்டல் அடித்தல் அல்லது உங்கள் பங்குதாரர் அல்லது அவர்கள் மதிக்கும் விஷயங்களில் வெறுப்பைக் காட்டுதல் போன்று உங்கள் துணையை அவமரியாதையாக நடத்தினால், அது விவாகரத்துக்கு வழிவகுக்கும்.
அவமதிப்பு செய்வது மிகவும் ஆபத்தான எச்சரிக்கை அறிகுறிகளில் ஒன்றாகும். இது தம்பதிகளிடையே பிரிவுக்கு வழிவகுக்கும். இதை உறவில் சரி செய்யாவிட்டால், இறுதியில் விவாகரத்துக்கு வழிவகுக்கும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications

