Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
Valentine's Week 2025: காதலர் தினத்துக்கு முன் 7 நாட்கள் கொண்டாடப்படும் காதலர் வாரத்தைப் பத்தி தெரியுமா?
Valentine's Week 2025: பிப்ரவரி மாதம் என்றாலே பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினம் தான் நினைவிற்கு வரும். சொல்லப்போனால் இந்த பிப்ரவரி மாதத்தை காதல் மாதம் என்றே அழைப்பர். காதலர்கள் இந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மட்டும் தங்களின் காதலை கொண்டாடுவதில்லை, ஒரு வாரத்திற்கு கொண்டாடுவார்கள்.
இந்த காதலர் வாரம் ஒவ்வொரு நாளும் காதலை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. நீங்கள் புதிதாக காதலில் விழுந்திருந்தால், இந்த ஆண்டு உங்கள் துணையுடன் காதலர் தினத்துடன், காதலர் வாரத்தையும் சிறப்பாக கொண்டாட விரும்பினால், காதலர் வாரத்தின் ஒவ்வொரு நாளும் எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை அறிந்து உங்கள் துணையுடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

பிப்ரவரி 07: ரோஸ் டே
காதலர் வாரத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுவது ரோஜா தினம். இந்த நாளில் காதலர்கள் தங்கள் துணைக்கு காதலின் சின்னமாக கருதப்படும் ரோஜாக்களை கொடுத்து, தங்கள் அன்பை, உணர்வுகளை வெளிப்படுத்துவார்கள். ரோஜாக்களின் ஒவ்வொரு நிறங்களும் ஒவ்வொரு அர்த்தத்தையும், உணர்ச்சிகளையும் கொண்டுள்ளன.
* வெள்ளை - புதிய தொடக்கங்கள், நல்லிணக்கம் அல்லது தூய்மையைக் குறிக்கிறது.
* மஞ்சள் - நட்பைக் குறிக்கிறது.
* சிவப்பு - அன்பைக் குறிக்கிறது.
* பிங்க் - பக்தியையும், மகிழ்ச்சியையும் குறிக்கிறது.
பிப்ரவரி 08 - ப்ரொபோஸ் டே
காதலர் வாரத்தின் இரண்டாம் நாளில் கொண்டாடப்படுவது ப்ரொபோஸ் டே என்னும் முன்மொழிவு தினம். இந்நாளில் காதலர்கள் தங்கள் துணையுடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். சிலர் இந்நாளில் காதலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் திருமண முன்மொழிவுகளையும் வெளிப்படுத்துவார்கள். எனவே உங்கள் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்த நினைத்தாலோ அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பினாலோ, அதை இந்நாளில் புதுமையான முறையில் வெளிப்படுத்துங்கள்.
பிப்ரவரி 9- சாக்லேட் டே
காதலர் வாரத்தின் மூன்றாம் நாளில் சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதல் தரும் மகிழ்ச்சியை நினைவுகூறும் வகையில் காதலிப்பவர்கள் சாக்லேட்டுகளை பரிமாறிக் கொள்வார்கள். இது வெறும் இனிப்புக்களை பரிமாறிக் கொள்வதை விட, உறவை வளப்படுத்தி இனிமையாக்குவதற்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது.
பிப்ரவரி 10 - டெடி டே
காதலர் தினத்தின் நான்காவது நாளில் கொண்டாடப்படுவது அரவணைப்பு மற்றும் பாசத்தை பிரதிபலிக்கும் டெடி தினம். இந்நாள் மென்மையான டெடி பொம்மைகளை பரிசளிப்பதன் மூலம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் "நான் உனக்காக இருக்கிறேன்" என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு டெடி பொம்மையை பரிசரிக்கலாம்.
பிப்ரவரி 11 - ப்ராமிஸ் டே
காதலர் தினத்தின் ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுவது ப்ராமிஸ் டே என்னும் வாக்குறுதி தினம். இந்நாளில் அன்பு, விசுவாசம் மற்றும் ஆதரவின் வாக்குறுதிகள் மூலம் காதலர்கள் தங்கள் பிணைப்பை அதிகரிக்கிறார்கள். எனவே இந்த தினமானது உறவில் நம்பிக்கையையும் புரிதலையும் ஏற்படுத்த உதவுகிறது. எனவே நீங்கள் அன்பு மற்றும் நம்பிக்கையின் இதயப்பூர்வமான வாக்குறுதிகளை அளிப்பதன் மூலம் உங்கள் பிணைப்பை வலுப்படுத்துங்கள்.
பிப்ரவரி 12 - ஹக் டே
காதலர் தினத்தின் 6 ஆவது நாளில் கொண்டாடப்படுவது ஹக் தினம். இந்நாளில் அன்பான அரவணைப்பு வார்த்தைகள் இல்லாமல் அன்பு, ஆறுதல் மற்றும் அக்கறையை வெளிப்படுத்தும். எனவே நீங்கள் உங்கள் துணையுடன் ஏதாவது சண்டை போட்டிருந்தால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தால், இந்நாளில் ஒரு காதல் நிறைந்த அரவணைப்பை கொடுங்கள்.
பிப்ரவரி 13 - கிஸ் டே
காதலர் தினத்தின் 7 ஆவது நாளில் கொண்டாடப்படுவது கிஸ் டே என்னும் முத்த தினம். காதலர் தினத்திற்கு முந்தைய தினம் கொண்டாடப்படும் இந்நாளில், காதலர்கள் ஒரு அன்பான முத்தத்துடன் காதலையும், பாசத்தையும் பகிர்ந்து கொள்வார்கள்.
பிப்ரவரி 14 - காதலர் தினம்
காதலர் வாரத்தின் கடைசி தினம் கொண்டாடப்படுவது தான் காதலர் தினம். இந்நாள் அன்பு மற்றும் பாசத்தின் அடையாளமாகும். இந்நாளில் காதலிப்பவர்கள் தங்கள் துணைக்கு பலவிதமான மறக்க முடியாத மற்றும் உணர்ச்சிவசப்படும் வகையிலான பல பொருட்களை பரிசளித்து, தங்கள் காதலை வெளிப்படுத்துவார்கள்.



Click it and Unblock the Notifications