Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 6 வகை நண்பர்களில் ஒருவர் உங்களுடன் இருந்தால் அவர்களை வாழ்க்கையில் எப்பவும் மிஸ் பண்ணிராதீங்க!
வாழ்க்கையில் மிகவும் எளிதான விஷயங்களில் ஒன்று நண்பர்களை உருவாக்குவது, ஆனால் பல ஆண்டுகளாக அவர்களுடன் பிணைப்பைத் தக்கவைத்துக்கொள்வது மிகவும் கடினமான ஒன்றாகும். அன்றாடப் பொறுப்புகள் மற்றும் கடமைகளால் நட்பை பராமரிப்பது என்பது மிகவும் கடினமாகிறது.
நம் ஆன்மா நண்பர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், நம் வேலைப்பளுவால் அதனை பின்பற்ற முடியாது. இருப்பினும், நண்பர்கள் இல்லாமல் வாழ்க்கை கடினமாக இருக்கும், அவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமென்றுதான் விரும்புவோம்.

அனைவரும் உண்மையான நண்பர்களாக இருப்பதில்லை, சிலர் ஒரு நோக்கத்திற்காக அல்லது பருவக்காலத்திற்கு மட்டும் நம் வாழ்க்கையில் வருகிறார்கள். காதல் உறவுகளைப் போலவே நண்பர்களையும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம்.
வாழ்க்கையில் நல்ல நண்பர்களைப் போலவே மோசமான நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மோசமான நண்பர்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையை நரகமாக்குபவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் உங்கள் ரகசியங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அதேசமயம் சில நண்பர்கள் உங்கள் வாழ்க்கையில் கிடைத்த வரமாக இருப்பார்கள். அவர்களை வாழ்க்கையில் ஒருபோதும் தவற விட்டுவிடக்கூடாது.
எப்போதும் காண்டேக்ட்டில் இருக்க வேண்டுமென்று சொல்லாதவர்கள்
எப்போதும் தொடர்ந்து தொடர்பு தேவைப்படாத நண்பர்களுடன் நெருக்கமாக இருங்கள் மற்றும் நீங்கள் சந்திக்கும் போது அவர்கள் உங்களை அன்புடன் ஆரத்தழுவுவார்கள். வாழ்க்கை பிஸியாக உள்ளது, அதை புரிந்து கொள்ளும் ஒருவருடன் இணைந்திருப்பது முக்கியம். எனவே அவர்களை தவற விடாதீர்கள்.
உங்களை மாற்ற கட்டாயப்படுத்தாத நண்பர்கள்
நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு உங்களை நீங்களாகவே இருக்க அனுமதிக்கும் நண்பர்களுடன் எப்போதும் நெருக்கமான தொடர்பில் இருங்கள். ஏனெனில் அவர்கள் ஒருபோதும் உங்களை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்ற முயற்சிக்க மாட்டார்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் உங்களுடன் ஒன்றாக இருப்பது நல்ல நட்பிற்கான அடையாளமாகும்.
ஆரோக்கியமான எல்லையை பராமரிக்கும் நண்பர்கள்
ஆரோக்கியமான எல்லைகளைக் கொண்ட நண்பர்களுடன் நெருக்கமாக இருங்கள். நட்பில் ஒருவர் எல்லைகளை நிர்ணயிப்பதைப் பார்ப்பது நட்பிற்கு உத்வேகம் அளிக்கிறது மற்றும் ஆரோக்கியமான எல்லைகளை உருவாக்க உங்களையும் ஊக்குவிக்கும்.
உங்களுக்கு நல்லது நடக்க விரும்புபவர்கள்
உங்களை எப்போதும் பொறுப்பேற்கச் செய்யும் நண்பர்களுடன் நெருக்கமாக இருங்கள். உங்களுக்கு சிறந்ததை விரும்பும் நபர்களுடன் இருப்பது உங்கள் வாழ்க்கையையே மாற்றும்.
உங்களை எப்போதும் ஆதரிக்கும் நண்பர்கள்
உங்களை ஆதரிக்கும் நண்பர்களுடன் நெருக்கமாக இருங்கள். உங்களின் மோசமான தருணத்தில் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் நண்பர்கள் கடவுள் உங்களுக்கு கொடுத்த பரிசுகள். அவர்களுடன் எப்போதும் நெருக்கமாக முயலுங்கள்.
மடைமாற்றம் செய்யாதவர்கள்
நீங்கள் கடினமான அல்லது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு தலைப்பைப் பற்றி பேசும்போது அதனை தவிர்க்காமல் ஆர்வமாக கேட்பவர்கள் உங்களின் ஆகச்சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். அவர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications
