Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களின் திருமணம் விவகாரத்தில் முடிய வாய்ப்பிருக்காம்... உங்க பிறந்த மாதம் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசியும், பிறந்த நட்சத்திரமும் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இவை ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்கிறது. அதேபோல ஒருவரின் பிறந்த மாதமும் முக்கியமானதாகும். ஏனெனில் ஒருவரின் பிறந்த மாதமும் அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து உதவுகிறது.
ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் உறவுகளில் அதிக சிரமங்களை எதிர்கொள்வதாகவும், திருமண உறவைத் தக்கவைத்துக்கொள்வதில் அதிக சிக்கலை சந்திப்பதாகவும் நம்பப்படுகிறது. அவர்கள் உணர்வுரீதியான சிக்கல்கள், தொடர்பு கொள்வதில் பிரச்சினைகள் அல்லது சுதந்திரத்திற்கான தீவிர ஆசை ஆகியவற்றால் இந்த பிரச்சினைகளை எதிகொள்கிறார்கள்.

இதனால் அவர்கள் திருமணம் தோல்வியில் முடியும் என்று அர்த்தமல்ல என்றாலும், அவர்களின் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்காது. இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் திருமண வாழ்க்கையில் மோசமான அனுபவத்தை எதிர்கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்கள், ஆர்வமுள்ளவர்கள், தொடர்ந்து உற்சாகத்தைத் விரும்புகிறவர்கள், இது அவர்களின் உறவுகளில் உணர்ச்சிரீதியாக முரண்படுவதற்கு வழிவகுக்கும். பன்முகத்தன்மை மற்றும் மாற்றத்திற்கான அவர்களின் தீவிர விருப்பம் திருமண உறவில் தேவைப்படும் நிலைத்தன்மையை பாதிக்கும்.
அவர்கள் கவர்ச்சிகரமான நபர்களாக இருந்தாலும், அதிகப்படியான பகுப்பாய்வு மற்றும் சந்தேக புத்தி அவர்களின் உறவுகளில் பிரிவுகளுக்கு வழிவகுக்கும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் உணர்ச்சிரீதியாக நிலைத்தன்மையைக் காணவில்லை என்றால், அவர்களின் காதல் வாழ்க்கை தவறான புரிதல்களாலும், நிறைவேறாத எதிர்பார்ப்புகளாலும் பாதிக்கப்படலாம்.
மே
மே மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் காதலை மனதிலிருந்து அணுகாமல் மூளையிலிருந்து அணுகுகிறார்கள். அவர்கள் உணர்வுகளை விட லாஜிக்காக சிந்திப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணை மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தாலும், வழக்கமான வழிகளில் அதை வழிபடுத்துவது அவர்களுக்கு மிகவும் சவாலாக இருக்கலாம், இதனால் அவர்களின் வாழ்க்கைத்துணை முக்கியத்துவம் அற்றவராகவோ அல்லது முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றோ உணரலாம்.
அவர்களின் சுதந்திரத்திற்கான ஆசை, குறிப்பாக உணர்ச்சிரீதியாக சவாலான சூழ்நிலைகளில், அவர்களை உறவிலிருந்து தனிமைப்படுத்தலாம். அவர்கள் உணர்ச்சிகளுக்குப் பதிலாக நடைமுறை தீர்வுகளை விரும்புகிறார்கள், இது திருமண உறவை பிரிவை நோக்கி நகர்த்தலாம்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் பிரமாண்டமான பரிசுகள், பாராட்டுகள் மற்றும் கவனத்தின் மையத்தில் இருப்பது போன்றவற்றை விரும்புகிறார்கள். அவர்களின் விசுவாசம் தீவிரமானது என்றாலும், அவர்கள் தங்கள் துணை தங்களை எப்போதும் பாராட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து பாராட்டப்படாவிட்டால் அல்லது மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டால் அவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படலாம், இதன் விளைவாக மனக்கசப்பு அல்லது பிரிவு ஏற்படலாம்.
நீண்ட கால உறவில், அவர்களின் உறுதிப்பாட்டுக்கான ஆசை, மிகவும் சமநிலையான உணர்ச்சிப்பூர்வமான பரஸ்பரத்தை விரும்பும் ஒரு துணையை சோர்வடையச் செய்யலாம். பரஸ்பர மரியாதை மற்றும் பணிவு இல்லாத நிலையில், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் துணையை விட்டு பிரிய முடிவெடுக்கலாம்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் மற்ற எல்லாவற்றையும் விட சுதந்திரம் மற்றும் ஆய்வுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள், இது திருமணத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுடன் முரண்படக்கூடும். அவர்கள் உறவில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட சிரமப்படலாம், அர்ப்பணிப்பு அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்று பயப்படுகிறார்கள்.
அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், நேர்மறையாகவும் இருக்க விரும்புகிறார்கள், எனவே அவர்கள் திருமண உறவின் பொறுப்புகளிலிருந்து விலகிச் செல்கிறார்கள். இது அவர்களின் துணைக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். வாழ்க்கைக்கான தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தும் மற்றும் அவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் ஒரு துணை கிடைக்காவிட்டால் அவர்களின் உறவு பிரிவில் முடிவடையலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
