Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
கள்ளக்காதல் அதிகமிருக்கும் டாப் 10 நாடுகள் இதுதான்... முதலிடத்தில் இருக்கும் நாடு எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
திருமணம் மீறிய உறவில் இருப்பதும், கள்ளக்காதலில் ஈடுபடுவதும் தற்போது பெருமளவில் அதிகரித்து வருகிறது. டேட்டிங் தளங்களின் வளர்ச்சியாலும், உடலுறவு தொடர்பான திறந்த மனப்பான்மையாலும், திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் தற்போது அசாதாரண வளர்ச்சி அடைந்து வருகிறது.
"தி ரிச்சஸ்ட்" என்ற வலைத்தளம், டேட்டிங் தளங்களிலிருந்து தரவை பகுப்பாய்வு செய்து, எந்தெந்த நாட்டினர் அதிகமாக திருமணம் மீறிய உறவில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்று வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் திருமணம் மீறிய உறவில் அதிகம் ஈடுபடும் டாப் 10 நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பின்லாந்து - 36%
இந்த பட்டியலில் பின்லாந்து பத்தாவது இடத்தில் உள்ளது. இங்கு திருமணமான தம்பதிகளில் 36% பேர் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள். இன்று கள்ள உறவுகள் குறித்து ஒரு சுவாரஸ்யமான பார்வை நிலவுகிறதுது. இங்கு திருமணம் மீறிய உறவுகள் 'இணை உறவுகள்' என்று அழைக்கப்படுகின்றன, மேலும் இங்கு கள்ள உறவுகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறது. இங்கு திருமணமான தம்பதிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான ஐந்து ஆண்களில் ஒருவர் குறைந்தது 10 பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கண்டறிந்துள்ளது, இது பெண்களை விட ஏழு மடங்கு அதிகம்.
யுனைடெட் கிங்டம்- 36%
பிரிட்டிஷார் வரலாற்றுரீதியாக தங்கள் தீவிர பாலியல் வாழ்க்கைக்கு பெயர் பெற்றவர்கள் அல்ல, ஆனால் அது இப்போது கொஞ்சம் மாறியுள்ளது. உண்மையில், திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களை ஏற்பாடு செய்ய உதவும் ஒரு முன்னணி வலைத்தளத்தின் உரிமையாளர், குறைந்தது 1 மில்லியன் பிரிட்டிஷ்காரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையை ஏமாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார். இங்கு விவாகரத்துக்கு முக்கியக் காரணமாக இருப்பது கள்ள உறவு என்று கூறப்படுகிறது.
ஸ்பெயின் - 39%
தெற்கு ஐரோப்பிய நாடான இது காதலில் தீவிர ஆர்வம் கொண்டவர்களால் நிரம்பியுள்ளது, எனவே ஸ்பெயின் பட்டியலில் முதலிடத்தில் இல்லாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் இங்கு ஓரளவு தடைசெய்யப்பட்டிருப்பதால், பெருமளவில் குறைக்கப்பட்டு தற்போது 39 சதவீதத்துடன் எட்டாவது இடத்தில் உள்ளது.
பெல்ஜியம் - 40%
பெல்ஜியத்தில் திருமணம் மீறிய உறவு என்பது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல ஆய்வுகள் கூறுகிறது. திருமணமான தம்பதிகளில் கிட்டத்தட்ட 40% சதவீதத்தினர் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டுள்ளனர்.
நார்வே - 41%
திருமணமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கு துணை தேடும் வலைத்தளமான விக்டோரியா மிலனின் கூற்றுப்படி, குளிர்காலத்தில் நார்வேஜியர்கள் இந்த தளத்தைப் பயன்படுத்துவது குறைவு. ஆனால் வெப்பநிலை உயரும் போது நார்வேஜியர்கள் பாலியல்ரீதியாகவும் அவ்வாறே நடந்து கொள்கிறார்கள் என்று கூறுகிறது. இங்கு திருமணமான 41% மக்கள் திருமணம் மீறிய உறவில் உள்ளனர்.
பிரான்ஸ் - 43%
பிரான்ஸ் மக்கள் எப்போதும் இதயப்பூர்வமான விஷயங்களைப் பொறுத்தவரை மிகவும் திறந்த மனதுடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். பெரும்பாலான மக்கள் திருமணம் மீறிய உறவு தார்மீகரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று நம்பும் ஒரே நாடு பிரான்ஸ். இங்கு விபச்சாரம் செய்பவர்களில் 28 சதவீதம் பேர் மட்டுமே தங்கள் தொழிலை நினைத்து வருத்தப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறார்கள்.
ஜெர்மனி - 45%
பிரெஞ்சுக்காரர்களை விட ஜெர்மன் மக்கள் காதல் உறவுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஜெர்மனியில் திருமணம் செய்தவர்களில் 45% மக்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள் .
இத்தாலி - 45%
உலக வரலாற்றில் முக்கியமான நாடான கள்ள உறவிலும் முக்கியமான இடத்தில் உள்ளது. திருமணமானவர்களில் 45% தம்பதிகள் கள்ள உறவில் ஈடுபடுவதன் மூலம் இந்த நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
டென்மார்க் - 46%
ஸ்காண்டிநேவிய நாடு அதன் குடிமக்களின் மகிழ்ச்சியை மதிப்பிடும் மதிப்பீடுகளில் எப்போதும் அதிக மதிப்பெண் பெறுகிறது, ஆனால் திருமணம் மீறிய உறவிலும் அவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். இங்கு வசிக்கும் மக்களில் மூன்றில் ஒருவர் தங்கள் வாழ்க்கைத்துணைக்கு துரோகம் செய்கிறார்கள்.
தாய்லாந்து - 56%
இந்த பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் தொகையில் 56% பேர் தாங்கள் துரோகம் செய்ததாக ஒப்புக்கொண்டனர். தாய்லாந்தின் இளைய தலைமுறையினர் சாதாரண கிக் கலாச்சாரத்தையும் ரசிக்கிறார்கள், அங்கு ஆண்களும் பெண்களும் தங்கள் துணையைத் தவிர பலருடனும் நேரத்தைச் செலவிடுகிறார்கள். இந்த உறவுகள் அனைத்தும் பாலியல்ரீதியானவை அல்ல.



Click it and Unblock the Notifications
