Latest Updates
-
6 நெல்லிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
அக்டோபர் 17, 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாள் காத்திருக்காம் -
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!
உடலுறவின்போது தெரியமா கூட உங்க கணவன் அல்லது மனைவிகிட்ட 'இந்த' 5 கேள்வி கேட்காதீங்க...பெரிய தப்பா போயிடும்!
உடலுறவில் செயல்பாடுகள்தான் மிக முக்கியம். ஆண், பெண் இருவரும் இணைந்து ஆர்வமாக உடலுறவை தொடங்கும்போது, அது மகிழ்ச்சியில்தான் முடிய வேண்டும். ஆனால், எல்லா நேரமும் தம்பதிகளால் உச்சக்கட்டம் அடைய முடியாது. இருப்பினும், இன்பத்தை பெறலாம்.
உடலுறவின்போது நீங்கள் சரியாக செயல்படாதது மட்டுமே உங்கள் துணைக்கு கவலையை ஏற்படுத்தாது. நீங்கள் பேசும் சில விஷயங்கள் கூட, அவர்களின் மனநிலையை மாற்றி, அவர்களை கவலையைட செய்யலாம். இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உடலுறவு எவ்வளவு அற்புதமானதோ, உற்சாகத்துடன் வருகிறதோ, அதேநேரம் சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது.

உங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடும்போது, நீங்கள் செய்ய விரும்பும் சில விஷயங்கள் உங்கள் மனதில் தோன்றலாம். ஆனால் நீங்கள் இறுதியில் செய்ய வேண்டிய விஷயம் அவரை அல்லது அவளை கட்டிப்பிடித்து, முத்தமிட வேண்டும். சிலர் உடலுறவின்போது சில விஷயங்களை பற்றி பேசலாம்.
நீங்கள் உடலுறவு கொள்ளும்போது, சில தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை உங்கள் கூட்டாளியின் மனநிலையையும் உங்கள் மனநிலையையும் கெடுக்கும். இந்த விஷயங்களால், நீங்கள் உங்கள் துணையின் சுயமரியாதையைக் கூட அழிக்க நேரிடலாம். எனவே உடலுறவின் போது நீங்கள் சொல்லக்கூடாத விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆண்குறியின் அளவு
பொதுவாக ஆண்குறியின் அளவு பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. பெரும்பாலும், அதை பற்றிய தவறான கட்டுக்கதைகளே அதிகம் உள்ளன. இந்நிலையில், ஆண்குறியின் அளவு குறித்து ஆண்கள் மிகவும் தாழ்வாக உணரலாம். அதனால், அவர்களின் ஆண்குறியின் அளவை பற்றி நீங்கள் ஒருபோதும் பேசக்கூடாது. உங்கள் கணவன் அல்லது காதலனிடம் சிறியதாக உள்ளது என்று சொல்லவே கூடாது.
உடலுறவின் போது இதைக் கேட்பதை விட ஒரு ஆணுக்கு அவமானம் வேறு எதுவும் இல்லை. ஆண்கள் ஆண்குறியின் அளவைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறார்கள், அது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. படுக்கையில் அவர்கள் நன்றாகச் செயல்பட முடியாமல் தொடர்ந்து கவலையாக இருக்கலாம். எனவே நீங்கள் அளவைப் பற்றி யோசித்தாலும், அதை வெளியே சொல்ல வேண்டாம்.
சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கேட்பது
உடலுறவு என்பது 5 நிமிடம் அல்லது 10 நிமிடத்தில் முடிய வேண்டிய வேலை இல்லை. இது தம்பதிகள் இருவரும் பெறும் சிற்றின்பம். நீங்கள் எங்காவது அவசரமாக செல்ல வேண்டி இருந்தால், உடலுறவு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், உடலுறவின் நடுவில், அதை விரைவாக முடிக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னால், அது ஒரு பெரிய திருப்பமாக இருக்கும்.
இது உங்கள் கணவன் அல்லது மனைவியின் மனநிலையை கெடுத்துவிடும். மேலும் விந்தணு விரைவில் வெளியேறும் அழுத்தத்திற்கு ஆளாகிவிடும். நீங்கள் எதிர்பார்ப்பது விரைவானது என்றால், நீங்கள் விஷயங்களைத் தொடங்குவதற்கு முன் அதைப் பற்றி தெளிவாக பேச வேண்டும். இருவரின் சம்மதத்துடன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீங்கள் உடலுறவு கொள்ளலாம்.
செல்போன் அழைப்பை எடுப்பது
செக்ஸ் என்பது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் இன்பம் பெறும் செயலாகும். இதில் தம்பதிகள் இருவரும் இணைந்து ஆர்வத்துடன் செயல்படும்போது மட்டுமே திருப்தியை பெற முடியும். நீங்கள் உடலுறவில் செயல்பட்டு கொண்டிருக்கும்போது, செல்போன் அழைப்பு வந்தால், அதை எடுப்பதற்காக உடலுறவை பாதியிலேயே விட்டுவிடுவது உங்கள் துணையை ஏமாற்றமடையச் செய்யும்.
செல்போன் அழைப்பை எடுப்பதற்காக நீங்கள் இதை நடுவழியில் விட்டுச் சென்றால், நீங்கள் உண்மையில் உடலுறவை ரசிக்கவில்லை அல்லது செக்ஸ் மற்றும் அதை எப்படி இன்பமாக பெறுவது என்பது பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமல் இருக்கலாம்.
நீங்கள் செய்வது இப்படி இல்லை
ஒவ்வொரு தம்பதிகளும் செக்ஸ் பற்றி வெளிப்படையாக பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்குள் நெருக்கத்தை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பதைப் பற்றி முன்கூட்டியே பேச வேண்டும். ஆனால், உடலுறவு கொள்ளும்போது இதை ஒருபோதும் செய்யக்கூடாது.
நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? எப்படி நடந்துகொண்டால் உங்களுக்கு பிடிக்கும் என்பதை பற்றி முதலிலேயே உங்கள் துணையிடம் சொல்ல வேண்டும். உடலுறவின் நடுவில், உங்கள் துணை இப்படிச் செய்யக்கூடாது என்று சொன்னால், அவர்களுக்கு நம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். எனவே உடலுறவின் போது இதை உங்கள் கணவன் அல்லது மனைவியிடம் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் முன்னாளை பற்றி பேச வேண்டாம்
எந்தவொரு புத்திசாலித்தனமான நபரும் உடலுறவின் போது தங்கள் முன்னாள் பற்றி குறிப்பிட மாட்டார்கள். உங்கள் முன்னாள் படுக்கையில் எவ்வளவு சிறப்பாக இருந்தார் அல்லது அவர் அல்லது அவள் என்ன விரும்பினார் என்பது முக்கியமல்ல.
அது உங்கள் கடந்த காலம், அதை பற்றி இப்போது பேச வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இது முற்றிலும் தவறானது. தற்போது உறவில் இருக்கும் உங்கள் துணையை பற்றிய விஷயங்களை மட்டுமே நீங்கள் பேச வேண்டும்.



Click it and Unblock the Notifications

