Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஃபோர்ப்ளே போது நீங்கள் செய்யும் இந்த தவறுகள் செக்ஸை மோசமான அனுபவமாக மாற்றுமாம்...!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு செக்ஸ் என்பது மிகவும் அவசியமானது. ஆனால் மகிழ்ச்சியான உடலுறவிற்கு ஃபோர்ப்ளே மிகவும் முக்கியமானதாகும். ஃபோர்ப்ளே என்பது மக்கள் பெரும்பாலும் புறக்கணிக்கும் ஒன்று, பல மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும், படங்களில் பார்த்தாலும் மக்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை.
தினமும் நீங்கள் சிறந்த மகிழ்ச்சியான உடலுறவை அனுபவிக்க விரும்பினால் இது மிகவும் அவசியமானதாகும். சுத்தமாக இருப்பது முதல் உங்கள் துணையின் உடலை மதித்தல் வரை நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பொதுவாக மக்கள் செய்யும் சில முக்கிய முன்விளையாட்டுத் தவறுகள் இங்கே உள்ளன, நீங்கள் இதையே தொடர்ந்தால் உங்கள் துணை உங்கள் மீதான ஆர்வத்தை இழக்க நேரிடும்.

முன்விளையாட்டுகள் நீண்ட நேரம் நீடிக்கக்கூடாது
முன்விளையாட்டு சிறந்த முறையில் நிறைய முத்தங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். கழுத்து, முதுகு மற்றும் காதுகளில் முத்தமிடுதல் என போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எதற்கும் அவசரப்படக் கூடாது, அதே நேரத்தில் ஒரு செயலுக்கு அதிக நேரம் எடுக்க வேண்டாம். ஏனெனில் முன்விளையாட்டுகள் நீண்ட நேரம் நீடிக்கும் போது அது உடலுறவிற்கான மனநிலையை கெடுத்துவிடும்.
முன்விளையாட்டை உதவி போல செய்யக்கூடாது
நீங்கள் விரும்பி ரசிப்பதால் மட்டுமே முன்விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். நீங்கள் உங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக மட்டுமே செய்கிறீர்களா அல்லது நீங்களும் அதை அனுபவிக்கிறீர்களா என்பதை உங்கள் துணை எளிதாக அறிந்து கொள்வார்கள். மேலும் பாராட்டுகளுக்காக ஃபோர்ப்ளேயில் ஈடுபடாதீர்கள். இந்த எண்ணங்களுடன் ஃபோர்ப்ளே செய்வது முழு உடலுறவு அனுபவத்தையும் அழித்துவிடும்.
ஃபோர்பிளேயை முற்றிலுமாகத் தவிர்த்தல்
மக்கள் பொதுவாக செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்று, ஃபோர்ப்ளேவை முழுவதுமாகத் தவிர்ப்பது அல்லது புறக்கணிப்பது. முன்விளையாட்டு மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒன்றாகும் மற்றும் தம்பதிகள் இருவரும் அதைச் செய்வதற்கான மனநிலையில் இருக்க வேண்டும். ஃபோர்ப்ளே உடலுறவிற்கு உங்களை தயாராக்குகிறது மற்றும் எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது. அதைத் தவிர்த்தால், உற்சாகமின்மை மற்றும் உடலுறவில் இன்பம் குறையும்.
கம்யூனிகேஷனைத் தவிர்ப்பது
முன்விளையாட்டின் போதும் மற்றும் உடலுறவின் போதும் தொடர்பு முக்கியமானது. உங்கள் துணையின் வாய்மொழி மற்றும் உடல் சைகைகளை புறக்கணிப்பது அசௌகரியம் அல்லது வலிக்கு கூட வழிவகுக்கும். அந்தத் தொடர்பை நீங்கள் தவறவிட்டால், உடலுறவு மிகவும் சலிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் துணையுடன் எப்போதும் தொடர்புகொள்வதை உறுதிசெய்து, அவர்கள் வசதியாக இருப்பதையும் உடலுறவை அனுபவிப்பதையும் உறுதிசெய்ய அவர்களின் உடல்மொழியில் கவனம் செலுத்துங்கள்.
கடினமாக செயல்படுவது
சிலர் மிகவும் கடினமான மற்றும் தீவிரமான முன்விளையாட்டில் ஈடுபடுகிறார்கள், பொதுவாக மென்மையான தொடுதலையே அனைவரும் விரும்புகிறார்கள். மிகவும் முரட்டுத்தனமாக இருப்பது உங்கள் துணையின் மூடை கெடுக்கலாம் மற்றும் அது அசௌகரியம் அல்லது வலியை ஏற்படுத்தும். ஃபோர்பிளேயின் தீவிரத்தைக் குறைத்து அதில் மென்மையை அதிகரிக்க வேண்டும்.
ஒரே இடத்தில் கவனம் செலுத்துவது
உடலுறவு எப்போதும் அந்தரங்க உறுப்புகளை மட்டும் சார்ந்ததில்லை. உடலின் மற்ற பகுதிகளை ஆராய்வதற்காகவே முன்விளையாட்டு செய்யப்படுகிறது. உங்கள் துணையின் பலவீனமான இடங்களைப் புரிந்துகொண்டு, அந்தப் பகுதியை நீங்கள் அதிகமாக முத்தமிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு பெண்ணின் மார்பகங்கள், ஒரு ஆணின் கழுத்து மற்றும் முதுகு, கைகள் மற்றும் காதுகள் அனைத்தும் உணர்திறன் வாய்ந்த பகுதிகள். எனவே முன்விளையாட்டின் போது, இந்த பாகங்களை ரசித்து, முத்தமிடுங்கள்.
கைகளை அதிகம் உபயோகிப்பது
கைகளை அதிகமாகப் பயன்படுத்துவது சிலருக்கு பலனளிக்கலாம். இருப்பினும், அதை மெதுவாகவும் மென்மையாகவும் பயன்படுத்துவது நல்லது. முதலில் உங்கள் துணையின் உடலை ஆராய்ந்து, எல்லா இடங்களிலும் மெதுவாக முத்தமிட்டு, பின்னர் கைகளைப் பயன்படுத்தவும். முன்விளையாட்டு மெதுவாகவும் நுட்பமாகவும் இருக்க வேண்டும். முரட்டுத்தனமாக கைகளை பயன்படுத்தக்கூடாது.



Click it and Unblock the Notifications

