Latest Updates
-
இன்றைய ராசிபலன் 01 ஜூன் 2026: ஜூன் மாத முதல் நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
தம்பதிகள் இணைந்து புகையிலையை கைவிடுவது எப்படி? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக இன்று ஒரு உறுதிமொழி எடுங்கள்! -
குருபகவான்-கேது இணைவதால் ஜூன் மாதம் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
குருபெயர்ச்சியால் உருவாகும் ஹன்ஸ் ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
'கோழி தண்டனை' கொடுக்கும் அளவுக்கு வன்முறையா? உங்கள் துணையின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்! -
பொரிச்ச முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி முட்டையை வறுத்து பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அலெக்ஸாண்டரின் தளபதியை தோற்கடித்த முதல் சக்திவாய்ந்த இந்திய அரசர் யார் தெரியுமா? -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால்… பணமும் அதிர்ஷ்டமும் தானாக தேடி வரும், தெரியுமா? -
கொங்குநாடு கோழி வறுவல் ரெசிபி - சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
பெண்கள் செய்யும் இந்த செயல்கள் ஆண்களுக்கு அளவில்லா எரிச்சலை உண்டாக்குமாம்... அது என்ன தெரியுமா?
மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். இது ஆண்-பெண் இருவருக்குமே பொருந்தும். ஆண்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு கட்டத்தில் தங்களிடம் உள்ள குறைபாடுகளை ஒப்புக்கொள்வார்கள். ஆனால் பெரும்பாலான பெண்கள் அவர்கள் எவ்வளவு குழப்பமானவர்களாக இருக்கிறார்கள் அல்லது எவ்வளவு எரிச்சலூட்டுகிறார்கள் என்பதை ஒருபோதும் ஒப்பருக்கொள்ள மாட்டார்கள்.
இதற்கு காரணம் பெரும்பாலும் பெண்கள் தாங்கள் எப்போதும் சரியானவர்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆண்கள் தங்களைப் போல புத்திசாலிகள் அல்ல என்பதே இந்த கண்ணோட்டத்திற்கு பின்னால் இருக்கும் பொதுவான காரணமாகும்.

இதனாலேயே பெண்கள் பெரும்பாலும் சரியென நினைத்து செய்யும் செயல்கள் ஆண்களுக்கு அவர்கள் மீது கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் ஆண்கள் வெறுக்கும் பெண்களின் பொதுவான செயல்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
முட்டாளாக அல்லது பணிவாக நடிப்பது
சில பெண்கள் தங்களுக்கு தெரிந்த அல்லது பிடித்த விஷயத்தைக் கூட தெரியாதது போல நடிப்பார்கள். எந்தவொரு ஆணும் முட்டாளாக அல்லது பணிவாக இருப்பது போல நடிக்கும் பெண்ணை விரும்ப மாட்டார்கள். ஏனெனில் இது கவனத்தை ஈர்ப்பதற்கான வழியாக அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் அதை முற்றிலும் வெறுக்கிறார்கள். ஒரு பெண் முட்டாள்தனமாக நடந்து கொண்டால், அவர்கள் தங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை ஆண்கள் உணர்கிறார்கள்.
மற்றவர்களின் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது
ஒரு ஆரோக்கியமான உறவை வளர்ப்பதற்கு எப்போதும் நல்லவராக இருப்பதோ அல்லது அப்படி நடிப்பதோ ஒருபோதும் உதவாது. பெண்கள் தாங்கள் செய்யாத விஷயங்களுக்காக மன்னிப்பு கேட்பதை ஆண்கள் வெறுக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் நினைப்பதற்கு மாறாக, பெண்கள் இதைச் செய்யும்போது ஆண்கள் வெறுக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்கும், தங்கள் செயல்களைப் பாதுகாக்கும் அளவுக்கு தங்களை மதிப்பதில்லை என்றும் இது உணர்த்துகிறது.
எல்லா ஆண்களும் ஒரே மாதிரி என்று கூறுவது
இது பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். எல்லா ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று ஒருபோதும் சொல்லக்கூடாது, ஏனென்றால் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தனித்துவமானவர்கள். இதன்மூலம் பெண்கள் தங்களுக்கு முதிர்ச்சியற்றவர் மற்றும் தவறாக விமர்சிப்பவர் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
அம்மா போல செயல்படுவது
எங்கே இருக்கிறார்கள், யாருடன் இருக்கிறார்கள், எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருகிறார்கள் என்று பெண்கள் தொடர்ந்து கேட்பது ஆண்களை சோர்வாக உணர்கிறாகள். நீங்கள் அவருடைய துணையாக இருந்தாலும், நீங்கள் அவருடைய தாய் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் ஒரு சுதந்திரமான மனிதர், அவர் சூழ்நிலைகளை சொந்தமாக கையாள முடியும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று புரிந்து கொள்ளுங்கள். ஒரு பெண் எப்போதும் தன் ஆணைப் பின்தொடர்ந்து, அவரைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
ஆண்களுக்கு பிடித்த ஹீரோவை திட்டுவது
பெண்களை விட ஆண்கள் திரைப்படத்தில் அதிகளவு தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள். அவர்களுக்கு பிடித்த ஹீரோக்களை அவர்கள் தங்களின் தெய்வமாக கருதுபவர்கள். பெண்கள் அதனை புரிந்து கொள்ளாமல் அவர்களுக்கு பிடித்த ஹீரோக்களை அல்லது நட்சத்திரங்களை திட்டுவது என்பது ஆண்களுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும்.
தோழிகளிடம் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வது
நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் சில விஷயங்களைப் பகிர்வது சரிதான், ஆனால் தங்கள் காதல் வாழ்க்கை மற்றும் துணையுடனான நெருக்கம் பற்றி தங்கள் தோழிகளுடன் பகிர்ந்து கொள்வது ஆண்கள் வெறுக்கும் முக்கியமான விஷயமாகும். தங்களுக்கும், தங்கள் துணைக்கும் உள்ள நெருக்கத்தை முதலில் அவர்கள் மதிக்க வேண்டும், அப்போதுதான் மற்றவர்கள் மதிப்பார்கள்.
வாட்சப் சேட்டிங்
பெண்களிடம் ஆண்கள் வெறுக்கும் முக்கியமான விஷயம் அவர்கள் மெசேஜ் அனுப்பும் முறை. ஒன்று 'Mm, Hmm' என்று மட்டும் அனுப்புவது அல்லது பக்கம் பக்கமாக கட்டுரை போல மெசேஜ் அனுப்புவது. இந்த இரண்டுமே ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். சொல்ல வேண்டியதை இழுத்து சொல்வது அல்லது எதுவுமே சொல்லாமல் இருப்பது என்று இரண்டையுமே அலட்சியததின் வெளிப்பாடாகத்தான் ஆண்கள் கருதுகிறார்கள்.



Click it and Unblock the Notifications

