Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
ஆண்களே! உங்கள் மனைவியை தவிர்த்து மற்ற பெண்களிடம் இந்த விஷயங்கள ஒருபோதும் நீங்க செய்யவே கூடாதாம்..!
ஆண், பெண் உறவு என்பது பல்வேறு சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. எந்தவொரு உறவையும், நபரையும் யாராலும் முழுவதுமாக புரிந்துகொள்ள முடியாது. இதை எந்த தம்பதிகளும் புரிந்துகொள்வதில்லை. மனிதர்களின் இயல்பு மற்றும் பண்புகள் எப்போது வேண்டுமாலும் மாறலாம்.
ஒரு உறவின் சில அம்சங்களில், தங்களின் துணை தானாகவே புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். உங்கள் எண்ணங்கள் மற்றும் ஆசைகளை பற்றி நீங்கள் உங்களின் துணைக்கு சொல்லாமல் அவர்களுக்கு தெரியாது. உங்களின் மனதில் உள்ளதை உங்கள் துணையால் படிக்க முடியும் அல்லது படிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.

இந்த நிலையில், சில பழக்கங்களை நீங்கள் தவிர்க்க வேண்டியிருக்கும். அதேநேரம் இணைக்க வேண்டியிருக்கும். ஒரு ஆண் தனது திருமண உறவிற்கு வெளியே பெண்களுடன் தொடர்பு கொள்ளும்போது தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன விஷயங்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
எல்லைகளை புறக்கணித்தல்
திருமணமான ஆண்கள் மற்ற பெண்களோடு பேசும்போது, தனிப்பட்ட எல்லைகளை மதித்து பேச வேண்டும். ஆரோக்கியமான மற்றும் நம்பகமான உறவைப் பேணுவதற்கு தனிப்பட்ட எல்லைகளை நிறுவுதல் மற்றும் மதிக்க வேண்டியது அவசியம். அதனால், மற்ற பெண்களிடம் பேசும்போது எல்லைகளை புறக்கணிக்காமல் தவிர்க்காமல் பேச வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரகசிய தொடர்பு
திருமணமான ஆண்கள் மற்ற பெண்களோட கடலை போடுவது மற்றும் ரகசிய செய்திகளை பகிர்ந்து கொள்வது, அவர்களின் உறவில் பேரழிவை ஏற்படுத்தலாம். தங்களது மனைவிக்கு தெரியாமல் மற்ற பெண்களுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்தால், அது உறவு முறிவுக்கு வழிவகுக்கும்.
உறவில் வெளிப்படைத்தன்மை முக்கியமானது. உங்கள் மனைவியுடன் நீங்கள் வசதியாகப் பகிர்ந்து கொள்ளாத மற்ற பெண்களுடனான எந்த உரையாடல்களையும் தவிர்க்க வேண்டும்.
ஒப்பீடுகள் மற்றும் விமர்சனங்கள்
உறவுகளில் ஆரோக்கியமான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் ஒப்பீடுகள் இருக்கக்கூடாது. வேறொரு பெண்ணை உங்கள் மனைவியுடன் ஒப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. அதேபோல மற்றவர்களின் முன்பு உங்கள் மனைவியை எந்த வகையிலும் விமர்சிக்கக்கூடாது. இது உங்கள் திருமண உறவை பாதிப்பதோடு மட்டுமின்றி தேவையற்ற பதற்றத்தையும் ஏற்படுத்தும்.
தனிப்பட்ட பிரச்சினைகளை மிகைப்படுத்துதல்
வேறொரு பெண்ணுடன் உங்கள் திருமணத்தின் அந்தரங்க விவரங்களைப் பகிர்ந்துகொள்வது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும். அது உங்கள் உறவை பாதிக்கலாம். தனிப்பட்ட விஷயங்களை உங்கள் திருமணத்தின் எல்லைக்குள் வைத்திருங்கள். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளை பொறுமையாகவும் நிதனமாகவும் யோசித்து, அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று உங்கள் மனைவியிடம் பேசுங்கள்.
அதிகப்படியான தனிமை நேரம்
உங்கள் மனைவி அல்லாத ஒரு பெண்ணுடன் அதிக நேரம் செலவழிப்பது ஊகங்களைத் தூண்டி வேறு மாதிரியான தொடர்புக்கு வழிவகுக்கலாம். வெளிப்படையான சூழலை பராமரிக்க குழு அமைப்புகளுக்கு செல்ல தேர்வு செய்யவும்.
நிதி சிக்கல்கள்
பண விவகாரங்கள் எந்தவிதமான உறவையும் சீர்குலைக்கும். மற்றொரு பெண்ணுடன் நிதி ரீதியாக சிக்குவதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். இது சிக்கல்கள் மற்றும் தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கலாம்.
வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணித்தல்
உங்கள் மனைவியின் உணர்வுகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மற்ற பெண்களுடனான உங்கள் தொடர்புகள் பற்றிய அவர்களின் கவலைகளை நிராகரிப்பது அல்லது புறக்கணிப்பது அவர்களின் நம்பிக்கையை உடைத்து தேவையற்ற சிக்கல்களை சந்தேகங்களை உருவாக்கலாம்.
கடலை போடுவது
தீங்கற்ற முறையில் கேலி பேசுவது அல்லது கடலை போடுவது சமூக தொடர்புகளின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்த நடத்தையின் எல்லை மீறாமல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மனைவியுடன் வலுவான தொடர்பைப் பேண உங்கள் திருமண உறவின் உணர்ச்சி எல்லைகளை மதிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
