Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
உங்க திருமண வாழ்க்கையில் இந்த 5 விஷயங்கள ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாமாம்... அது என்ன தெரியுமா?
திருமணம் என்பது நம்பிக்கை, நேர்மை, புரிதல் மற்றும் மரியாதை போன்ற வலுவான தூண்களின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு சிக்கலான உறவு ஆகும். திருமண உறவில் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்க, ஒருவருக்கொருவர் முழுமையாக புரிந்துகொண்டு, இணைந்திருக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். உறவில் எல்லாம் சமமாக இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.
தங்கள் துணையை சமமாக பார்ப்பது மற்றும் நடத்துவது திருமண உறவிற்கு சிறந்த முன்னேற்றமாக இருந்தாலும், அது எப்போதும் உண்மையல்ல. தம்பதிகளுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன மற்றும் விஷயங்கள் எப்போதும் சமமாக இருக்காது.

இதேபோல், ஒரு திருமணத்தில் சில விஷயங்கள் மிக முக்கியமானவை என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், அவையெல்லாம் அவ்வளவு முக்கியமில்லை. திருமண உறவில் ஒரு பெரிய ஓட்டையை ஏற்படுத்துவதற்கு உண்மையில் முக்கியத்துவம் இல்லாத சில விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
வீட்டு வேலைகள்
ஒவ்வொரு திருமணமான தம்பதிகளுக்குள்ளும் வீட்டு வேலைகள் செய்யும்போது சண்டைகள் வரும். பாத்திரங்களைக் கழுவுதல், சலவை செய்தல் போன்ற வீட்டு வேலைகளை யார் செய்ய வேண்டும்? அல்லது நீயே செய்! என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
தம்பதிகளுக்கு இடையே பொறுப்புகள் மற்றும் கடமைகளைப் பிரிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு இதுவும் முக்கியம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு முக்கியமல்ல. தம்பதிகள் இருவரும் வேலையை பகிர்ந்துகொள்ளலாம். ஆரோக்கியமான உறவுக்கு திறந்த தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு போன்றவை தேவைப்படும்.
தனிப்பட்ட பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள்
தம்பதிகள் இருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஒவ்வொரு தனிநபருக்கும் ஒருவித பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்கள் இருக்கின்றன. அது அவர்களின் கூட்டாளியின் விருப்பங்களுடன் நிச்சயம் ஒத்துப்போகாது.
உங்கள் இருவருக்குள்ளும் பகிரப்படும் பொழுதுபோக்குகள் சுவாரஸ்யமாக இருக்கும் அதே வேளையில், அவரவர் தனிப்பட்ட விருப்பங்களைக் கொண்டிருப்பது ஆரோக்கியமானது. பரஸ்பர புரிதல் மற்றும் ஒருவரின் பொழுதுபோக்கிற்கு மற்றொருவர் கொடுக்கும் ஆதரவு இருக்கும் வரை, தம்பதிகள் அனைத்து ஆர்வங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
விருப்பங்களில் வேறுபாடுகள்
தம்பதிகளாக இணைந்திருப்பதால், இருவருக்கும் ஒரே விருப்பங்கள் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இசை, திரைப்படங்கள் மற்றும் உணவு போன்ற எல்லாவற்றிலும் தம்பதிகள் வெவ்வேறு ரசனைகளைக் கொண்டிருக்கலாம்.
இந்த வேறுபாடுகள் முற்றிலும் இயல்பானவை. இவை உறவின் தரத்தை பாதிக்காது. ஒருவருக்கொருவர் ரசனைகளையும் விருப்பங்களையும் பாராட்டுவதும் ஏற்றுக்கொள்வதும் முக்கியம். அதைப் பற்றி மிகவும் வெறுப்பாக இருக்கக்கூடாது.
சிறிய வினோதங்கள்
ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கென தனி வினோதமான அல்லது வித்திரமான பழக்கவழக்கங்கள் இருக்கலாம். அந்த பழக்கங்கள் தங்கள் துணையை தொந்தரவு செய்யலாம். படுக்கையில் குறட்டை விடுவது போன்ற சிறிய பழக்கங்கள் பொதுவாக பாதிப்பில்லாதவை. இவை திருமணத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்காது. அனைவருக்குள்ளும் குறைகள் இருக்கின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வது ஆரோக்கியமான மற்றும் இணக்கமான திருமண உறவுக்கு நல்லது.
கழிப்பறையை சரியாக பயன்படுத்தமால் இருப்பது
கழிப்பறையை பயன்படுத்துவதில் தம்பதிகளில் ஒருவர் அலட்சியமாக இருக்கலாம். கழிப்பறையை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது பெரும் பிரச்சனையாக இருந்தாலும், எல்லா வீடுகளிலும் இது மிகவும் பொதுவான விஷயம்.
கழிவறை இருக்கையை மேலே விட வேண்டுமா அல்லது கீழே வைக்க வேண்டுமா என்று தம்பதிகள் எப்போதும் சிந்திக்கிறார்கள். இது இறுதியில் ஒரு சிறிய பிரச்சினையாக மாறி, தம்பதிகளுக்குள் சங்கடம் அல்லது விரக்தியை ஏற்படுத்தலாம். ஆனால், இவை திருமண பந்தத்தின் தரம் மற்றும் வலிமையை பாதிக்க வேண்டிய அவசியமில்லை.



Click it and Unblock the Notifications

